புதன், 2 பிப்ரவரி, 2011

உளறல் - 16


எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்...
இதற்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்; அதைச் சமூகப் பணி என்று முத்திரையுமிடுகின்றோம்...
ஆனால் உலகம் வழக்கம் போல் அதன் இயல்பிலே, போக்கிலேதான் போய்க்கொண்டிருக்கிறது...
பல அருளாளர்கள். அறிஞர்கள், ஞானியர்கள் தோன்றியும் இச்சிக்கல்கள் இன்னும் தீரவில்லை என்பதே உண்மை...
 இச்சிக்கலுக்குத் தீர்வு காண முடியுமா என்பதும் தெரியவில்லை...
இருப்பினும் நாம் ஒரு தேடலை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும்...
இதற்கு நாம் என்ன செய்யலாம்?
முதலில் நாம் நல்லவர்களாக இருக்க முயல வேண்டும்...
இதுவே இதற்கு நல்லதொரு தீர்வாக அமையுமென்று கருதுகின்றேன்...
”நான் நல்லவன்” என்ற நம்பிக்கை நமக்கு எற்படுமாயின் அஃது ஆணவத்தை ஏற்படுத்திவிடும் என்பதும் நாம் அறிந்ததே!
நம்பிக்கை என்பதும் நமது அறியாமையே!
 அது நமக்கு உண்மையான தெளிவினைத் தராது...
எனவே,
நமக்குள்ளே ஒரு தேடல் இருக்குமாயின் நாம் திண்ணமாக ஒரு நாளில் தெளிவினைப் பெறுவோம்...
அப்படியாயின் மற்றவர்களின் கதி என்ன என்ற வினா எழலாம்...
அனைவருக்கும் வாழ்வில் என்றாவது ஒரு நாளில் தேடல் தொடங்கும்...
அதுவரை நாம் நமக்குள்ளே உண்மையைத் தேடுவோம்..

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

உளறல் - 15


மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்க்கும் போது ஒரு வித நிறைவு ஏற்படுகிறது; மன அமைதியும் ஏற்படுகிறது...
துன்பங்களைக் காணும் போது மனம் கவலையுறுகிறது...
நான் இன்று வாழும் வாழ்க்கை திண்ணமாக எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை...
ஆயினும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் ஒரு மன நிறைவு கொள்ள முடிகிறது...
அதுதான் என்னுடைய மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...
இருப்பினும் இதுவும் தொடர வாய்ப்பில்லாமல் போகும் போதுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது...என்னாலும் பொஇயாகப் பழக முடியவில்லை...
அவர்களாலும் பொய்யாகப் பழக முடியவில்லை...
இங்குதாம் வேற்றுமைகள் தொடங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது...
எஃது எப்படி இருப்பினும் ஒன்றை மட்டும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்...
எதற்கு அதிக ஆற்றல் இருக்கிறதோ அதுவே வெல்லும்...
அதுவே நாம் தேடும் உண்மையாகவும் இருக்கும்...
தீயில் ஒரு பொருளைப் போட்டால் அப்பொருளும் தீயின் தன்மையைப் பெறுமேயன்றி தீ அப்பொருளாக மாறாது...
இதுவே இயற்கையின் நியதி...
இறைமையின் ஆட்சி..

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...