செவ்வாய், 22 மார்ச், 2011

“வாய்மையே வெல்லும்...”


எப்போதும் உண்மையே பேசுங்கள்..

நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..

அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்..

ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்..

ஒரு உண்மையை சொல்ல அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை..

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்”


இது எல்லோருக்கும் பொருந்தும்.. தாமதமாக கிடைத்தாலும் தர்மத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு..


உண்மை பேசுவதில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால்,


நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.. உண்மை என்றும் மாறப்போவதில்லை..


பொய் சொன்னால்தான், யாரிடம் என்ன சொன்னோம், எங்கே சொன்னோம் என்றெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்..


இதை என் வேண்டுகோள் என்றுகூட எடுத்துக் கொள்ளுங்கள்..


எப்போதும் உண்மையையே பேசுங்கள்.. உங்கள் மனதிற்கு உண்மையாய் இருங்கள்.. பொய்யாக நடிக்காதீர்கள்.. மனதிற்கு பிடிக்காததை செய்ய வேண்டாம்.. அது அனைவருக்கும் வருத்தத்தையே தரும்..


வாழ்க்கை என்பது ஒருமுறைதான்.. அதை நன்றாக வாழ்ந்தோம் என்ற மன நிம்மதியை நீங்களே உங்களுக்கு தாருங்கள்..

புதன், 16 மார்ச், 2011

உளறல் - 20

இன்றைய நிலையில் உள நிலையில் தெளிவில்லை...
என்னுடன் அன்புடன் பழகுகின்றவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை நினைத்து எதுவுமே செய்ய இயலாத நிலையில் இருப்பதை நினைக்கும் போது வருத்தமே மேலிடுகிறது...
என்னால்தான் இத்துன்பமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெளிந்த உண்மையாக இருந்தாலும் அவர்கள் இதில் காட்டும் உறுதி என்னை வியக்க வைக்கிறது...
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று கூறும் அளவிற்கு என் பக்குவம் உயர்ந்திருக்கவில்லை...
என்னால் அவர்களை விட்டு விலகி இருக்கவும் முடியவில்லை...
அவர்களுக்காக...
அவர்களின் உண்மை அன்பிற்காக...
அவர்களின் மன உறுதிக்காக...
எது நடந்தாலும் இந்த உறவில் உண்மை இருக்கிறது என்ற தெளிவான நிலைப்பாடும்...
எதையும் இழக்கத் தயாராக இருக்கும் மன உறுதியும்...
என்னை வியப்பில் ஆழ்த்துகிறது...
இதுவே வாழ்வின் இறுதிக் கட்டமோ என்று நினைக்கத் தோன்றுகிறது...
எதற்காகவோ எல்லாவற்றையும் இழக்கும் துணிவு (துறவு ) என்பது வாழ்வின் இறுதி நிலை என்பதுதானே உண்மை?
எனது வேண்டுதல் இதுவே...
”என் மீது அன்பு செலுத்தியவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை என்றாலும் அமைதியாக வாழவாவது அருள் புரி”

எனது தேடல் தொடரும்...

உளறல் - 19

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் உண்மையாகவே என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்துவிட்டது...
அவர்கள் ஆறுதல் பெற இறைவனை வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை...
உலகம் எவ்வளவுதான் தொழில் நுட்பத்தில் வளர்ந்திருந்தாலும் இயற்கை மனிதனை வென்று விடுகிறது என்பதுதான் உண்மை என்பதைத் தெளிவாக உணர முடிகிறது...
ஒரு சராசரி மனிதனாக அவர்களுக்காக வருத்தப்பட முடிகிறதே தவிர நம்மால் வேறு என்ன செய்ய இயலும்?
நம்மை மீறிய ஆற்றல் ஒன்று இருக்கிறது என்பதையே இஃது உணர்த்துகிறது...
நாம் மற்றவர்களுக்காக வாழ்ந்தாலும் இது போன்ற சமயங்களில் நம்மால் எதுவுமே செய்ய முடியாத நிலைதான் ஏற்படுகிறது...
அவர்களுக்காக இறைவனை வேண்டுவதைத் தவிர...
எனவே,
மனிதர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன வழி என்பதை தனி மனிதனே சிந்திக்க வேண்டும் எனக் கருதுகின்றேன்.
மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் நம்மால் வாழ இயலுமா என்பதும் தெரியவில்லை...
உலகத்துடன் இணைந்து வாழும் போது இவ்வாறு நிகழ்வது இயல்பான ஒன்றுதான் என்பதை உணர்ந்தாலும் நம் மனம் ஏன் அவர்களுக்காகக் கவலை கொள்கிறது என்பதும் புரியவில்லை...
அன்பு கொள்வதால் இது நிகழ்கிறது என்று கொண்டாலும் அன்பு கொள்வதே தவறு என்று அல்லவா பொருள்படுகிறது?

ஒன்றுமே புரியாமல் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டுமே இப்பொழுது புரிந்த ஒன்றாக இருக்கிறது...

திங்கள், 7 மார்ச், 2011

உளறல் - 18

உண்மை அன்பு இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை..
மற்றவர்களைப் பார்த்து இந்த உலகைப் புரிந்து கொண்டேன்!
ஒரு சிலரைப் பார்த்து என்னையே புரிந்து கொண்டேன்...
உலக இலக்கியங்களில் படித்த உயர்ந்த கருத்துகளையெல்லாம்
அன்பான உள்ளங்களுடன் பழகிய ஒவ்வொரு கணமும்
உணர்ந்து கொண்டுதான் இருக்கின்றேன்...
அனைவருடனும் நெருங்கிப் பழக இயலவில்லை...
எனவே யாரையும் எளிதில் நம்பவும் மனம் மறுக்கிறது...

உண்மை தேடல் தொடர்கிறது...
நம்மைப் பாராட்டும் நண்பைர்களை விட
நம்மைத் தூற்றும் விரோதிகளைத்தாம் நாம் அதிகம் நேசிக்க வேண்டும்...
அவர்கள்தாம் நம் வலிமையை உண்மையாக உணர்ந்தவர்கள்...
ஒன்றுமே இல்லாதவனிடமா நம்மால் அழுக்காறு கொள்ள முடியும்?
நம்மை விட அதிகம் உள்ளவனிடம்தான் அழுக்காறு ஏற்படும்...
எனவே உண்மையை உணர்ந்து
இந்த உலகைப் பற்றிய உண்மைகளை அறிவோம்...
உலகைப் புரிந்து கொள்ள எனது தேடல் தொடரும்...
நமக்கு
வாக்கில் உண்மையும்
சிந்தனையில் உயர்வும் தெளிவும்
செயலில் பணிவும்
தோற்றத்தில் எளிமையும் இருக்க வேண்டும்...
இதுவே தற்சமயம் எனது வேண்டுதலாகும்...

ஞாயிறு, 6 மார்ச், 2011

உளறல் - 17

என்னைச் சுற்றியிருப்பவர்கள் உண்மையானவர்களாகவே இருக்க வேண்டும் என்ற என் வேண்டுதல் என்னைத் தனிமை படுத்திவிடும் என்றே கருதுகின்றேன்...
மற்றவர்களின் உரிமையில் தலையிடக்கூடாது என்று எண்ணினாலும் சில
வேளைகளில் அன்பின் அடிப்படையில் தலையிட நேரிடுகிறது...
இது சரியா தவறா என்றும் தெரியவில்லை...
நான் எங்குச் சென்று கொண்டிருக்கிறேன் என்று எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை...
ஆனால்,
யாரும் இல்லாத ஏதோ ஓரிடத்திற்குச் செல்ல முனைகிறேன் என்பதை மட்டும் உணர முடிகிறது...
இப்பொழுது ஏற்பட்டிருக்கிற உளப்போராட்டத்தில் விரைவில் தெளிவு ஏற்பட்டு ஒரு விடிவும் ஏற்படும் என்று நினைக்கின்றேன்!
ஒன்று மட்டும் உண்மை...
நான் மற்றவர்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இறைவன் வழிகாட்டிக்கொண்டே இருக்கிறான் என்பதை உணர முடிகிறது...
உள்ளத்தின் வலியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...