செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நட்பு என்பது.....???

நட்பு என்பது நடிப்பல்ல அது நாடி துடிப்பு

கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம். ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள் என்றும் மறைவதில்லை உன் நட்பை போல (என் கற்பனை நட்பு)

நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் மட்டும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.

நூறு முறை பிறந்தாலும் ஒரு முறை இறந்தாலும், மறுமுறை பிறக்கும் போது உன் நட்பு வேண்டும் என்று இறைவனிடம் கேட்பேன்..

மனசுக்கு பிடிச்சவங்க கூட மனம் விட்டு பேசும் போதுதான் மரண வலி கூட மறந்து போகும். So share ur feelings

காதலிப்பது குற்றம் என்றால் காதலிக்க வேண்டும் என்று உணர்வை கொடுத்த "கடவளும்" குற்றவாளி தான்

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்து. உன்னால் சாதிக்க முடியும்.

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்….

உரிமை கொண்டாட ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளத்தை புரிந்துகொள்ள ஒரே ஒரு நட்பு போதும்.

நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்.

செடிக்கும் பூவுக்கும் உள்ள சொந்தம் ஒரு நாள் தான். ஆனால் செடிக்கும் வேருக்கும் உள்ள சொந்தம் உயிர் உள்ள வரை தொடரும். நம் நட்பை போல…

வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..

உறவு என்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும் "உயிர்" என்று சொல்லிக்க ஒருவர் இருந்தால் போதும். நம் நட்பை போல...

மண்ணில் விழுந்த மழை துளியை பார்த்து பூமி கேட்டது எத்தனை முறை விழுவாய் என்று. மழை துளி சொன்னது என்னை தாங்கி கொள்ள நீ இருக்கும் வரை என்று..

வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே பெரியது.. So don’t worry about anything..

வெளிச்சத்தை தேடினேன் நிலவை கண்டுபிடித்தேன். கனவை தேடினேன் தூக்கத்தை கண்டுபிடித்தேன். நட்பை தேடினேன் உன்னை கண்டுபிடித்தேன் (ஆனால் உண்மையில் இன்னும் கண்டுபிடிக்கவில்லை) .......

(நட்பு எப்படி இருக்க வேண்டும் என்ற எனது எண்ணமே, எழுது வடிவானது.........
http://www.raaga.com/player4/?id=6981&mode=100&rand=0.33952525003347855

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

இயற்கையின் சீற்றம்

இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள யாராலும் முடியாது என்பதைத்தான் இறைவன் ஜப்பான் பேரிடர் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறான்...
அறிவியல் மனிதனின் நாகரிக மேம்பாட்டுக்கு உதவி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்தாக மட்டுமே முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
வசதிகளைப் பெருக்கி வாழ்க்கையை வளமாக்குவது மனித இயல்பு எனினும் அதை எப்படி, எந்த அளவுக்கு செய்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்,
அதற்கு நாம் என்ன விலை கொடுக்க நேரும் என்பதை இதன் வழி,
இயற்கை சீற்றம் மனித குலத்திற்கு உணர்த்தியிருக்கிறது...
எந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே நிவாரண உதவிகளை அனுப்பும் ஜப்பான் நாட்டின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
தனக்கென, தன் நாட்டு மக்களுக்கென எந்த நாடும் உதவ முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளது...
அங்கு ஏற்பட்டுள்ள அணுக்கசிவு அந்நாட்டிற்கு யாரையும் செல்ல விடாமல் தடுக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது...
இது கொடுமையிலும் கொடுமையல்லவா?

ஜப்பான் நாட்டு மக்கள் இத்துன்பத்திலிருந்து மீள,
உலக மக்கள் அனைவரும் ஒரு மனத்துடன் இறைவனை வேண்ட, ”இறைவா அருள் பாலிப்பாயாக...”

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...