மனித உறவுகள் என்பது அவாவின் அடிப்படையிலே எழுவது...
எனவே,
இங்கு எதிர்பார்ப்புகள்தாம் அதிகம்...
தனி மனிதர்களிடம் நாம் காட்டும் அன்பு நமது தேவைகளையும் அவர்களது தேவைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கே என்பதை மனிதன் உணரும் போதுதான் அவனுடைய தேடல் மீண்டும் தொடங்குகின்றது...
நமது மனத்திற்கு ஆறுதல் கிடைக்கும் இடங்களே நமக்குச் சிறந்த உறவாகத் தெரிகிறது...
ஆனால் அதுவும் தற்காலிக உறவே என்பதை காலம் வரும் போது உணர்வோம்...
தன்னலம் கருதாது,
உலக மாந்தரிடம் காட்டும் அன்பும் உண்மையானதா என்ற ஐயம் எழவே செய்கின்றது...
அங்கும் நமது நிறைவு என்ற தன்னலம் நம்மிடம் இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகின்றது...
எனவே எஃது உண்மை?
தன்னலம் இல்லா உறவில் அன்பு இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும் அஃது என்றென்றும் நிலைத்திருக்குமா என்பதே எமது வினா?
மனிதன் தனது பக்குவத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் இயல்புடையவன்...
எதிலும் மாற்றம் ஏற்படும் என்பதே உண்மை...
அதுவே உலக இயல்பு...
அதை மாற்ற நாம் யார்?
“எங்கே கருணை இயற்கையில் உள்ளதோ அங்கே விளங்கும் அருட்பெரும் சிவமே”
இவ்வரியின் பொருளை உணரும் காலம் விரைவில் வர வேண்டும்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
சனி, 13 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.