வேடங்கள் நிறைந்த உலகில் உறவுகள் எல்லாம்
வேடங்கள் என்றே நினைத்தேன்...
உறவுகளிலும் உண்மை இருக்கும் என்று
உண்மையின் உரைகல்லாய் வந்தவனே ...
என்றென்றும் உன் அன்பைச் சுவாசிக்க வேண்டும்
வாழ்வதென்றால் உன் அருகினில் வாழ வேண்டும்,
சாவதென்றாலும் உன் அருகினில்தான் சாக வேண்டும்...
எனக்குத் துன்பம் நேரும் போதெல்லாம்
துணிவுடன் போராடச் சொன்னாய்...
நான் வாழ்க்கையில் வருந்தும் போதெல்லாம்
வாஞ்சையுடன் வருடினாய்...
உன் அன்பினில் தாய்மையைக் காண்கின்றேன்...
கண்டிப்பில் தந்தையைக் காண்கின்றேன்..
நல்வழிகாட்டும் போது நல்லாசானைக் காண்கின்றேன்..
துன்பத்தில் தோள் கொடுக்கும் போது
நல்ல நட்பினைக் காண்கின்றேன்.
என்னோடு சண்டைப் பிடிக்கும் போது உன்னைக்
குழந்தையாய்க் காண்கின்றேன்...
என் உயிருடன் கலக்கையில் இறைமையை உணர்கின்றேன்...
இப்படிக் காணும் யாவிலும் நீக்கமற
நிறைந்திருக்கும் நீ
காலம் முழுக்க எனக்கு மட்டும்தான்
என என் மனம் வேண்டுவதுண்டு...
நீயே
இருக்கும் போது
இந்த வேண்டுதல் எதற்கு?
கருவறை தாண்டி வந்த
மழலையின் தயக்கம்,
மலர்ச்சி, தவிப்பு, அழுகை,
அரவணைப்பின் ஏக்கம்
அனைத்துமே மீண்டும் என்னுள் எழுகிறது...
உன்னால் நான் காணும் உலகில்
உன் குரல் கூட மழலை ஒலியாகவே கேட்கிறது...
இனி,
காலமெல்லாம் நீயாகவே நான் இருப்பேன்...
எழுதியவர்....
’யாரோ’
வேடங்கள் என்றே நினைத்தேன்...
உறவுகளிலும் உண்மை இருக்கும் என்று
உண்மையின் உரைகல்லாய் வந்தவனே ...
என்றென்றும் உன் அன்பைச் சுவாசிக்க வேண்டும்
வாழ்வதென்றால் உன் அருகினில் வாழ வேண்டும்,
சாவதென்றாலும் உன் அருகினில்தான் சாக வேண்டும்...
எனக்குத் துன்பம் நேரும் போதெல்லாம்
துணிவுடன் போராடச் சொன்னாய்...
நான் வாழ்க்கையில் வருந்தும் போதெல்லாம்
வாஞ்சையுடன் வருடினாய்...
உன் அன்பினில் தாய்மையைக் காண்கின்றேன்...
கண்டிப்பில் தந்தையைக் காண்கின்றேன்..
நல்வழிகாட்டும் போது நல்லாசானைக் காண்கின்றேன்..
துன்பத்தில் தோள் கொடுக்கும் போது
நல்ல நட்பினைக் காண்கின்றேன்.
என்னோடு சண்டைப் பிடிக்கும் போது உன்னைக்
குழந்தையாய்க் காண்கின்றேன்...
என் உயிருடன் கலக்கையில் இறைமையை உணர்கின்றேன்...
இப்படிக் காணும் யாவிலும் நீக்கமற
நிறைந்திருக்கும் நீ
காலம் முழுக்க எனக்கு மட்டும்தான்
என என் மனம் வேண்டுவதுண்டு...
நீயே
இருக்கும் போது
இந்த வேண்டுதல் எதற்கு?
கருவறை தாண்டி வந்த
மழலையின் தயக்கம்,
மலர்ச்சி, தவிப்பு, அழுகை,
அரவணைப்பின் ஏக்கம்
அனைத்துமே மீண்டும் என்னுள் எழுகிறது...
உன்னால் நான் காணும் உலகில்
உன் குரல் கூட மழலை ஒலியாகவே கேட்கிறது...
இனி,
காலமெல்லாம் நீயாகவே நான் இருப்பேன்...
எழுதியவர்....
’யாரோ’

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஉண்மை.....தோழியே...!
பதிலளிநீக்குஉண்மை, நான் சொல்கிறேன்..,
உள்ளத்தில்......உள்ளதைச் சொல்கிறேன்,
உன்னிடம்,..... நான் சொன்னதில்லை,
!
என் கற்பனையில்...உனைக்கண்டதில்லை,
என் கனவிலும்.....வந்ததில்லை,
எண்ணத்தில்.....நீ.....என்றுமில்லை,
எண்ணும்படி.....நான்...நடந்ததில்லை...........!
நட்பு என்றும்.....மாறுவதில்லை,
நாளடைவில்....அது மறைவதுமில்லை......!
களங்கங்கள்....உன்மேல்....என்றுமில்லை,
கலங்கும்படி....நான் நடந்ததில்லை.....!
உதட்டின்மேல் பொய்யில்லை,
உள்ளத்திலும்...பொய் என்றுமில்லை.....!
உண்மையில்....எவ்வித....மாற்றமுமில்லை.....!