என்னை யாரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியது கிடையாது...
இயன்றால் என்னுடன் இருங்கள்; இயலவில்லையெனின் விலகியே இருங்கள் என்பதுதான் என் சித்தாந்தம்.
மற்றவர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதுதான் தற்போதைய என் ஆதங்கம்; இன்றைய நிலை...
பொதுவாகப் பழகும் வரை நமக்கு எந்தச் சிக்கல்களும் எழுவது கிடையா;
நெருங்கிப் பழகும் போதுதான் சிக்கல்கள் தோன்றுகின்றன; தொடர்கின்றன.
இவை இயல்பான ஒன்றுதான் என்றாலும் இதயத்தில் ஏற்படும் வலி என்பது, நமது நெருக்கத்தின் அளவை வைத்தே அதிகரிக்கவோ குறையவோ செய்கிறது...
நமது எதிர்பார்ப்புகளை நாம் மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் இச்சிக்கல் ஏற்படுகிறது...
அஃது இயல்பாக ஏற்கப்படும் போது இச்சிக்கல் தோன்றுவது கிடையாது...
நமது உறவுகளில் உண்மை இல்லாத வரை விட்டுக் கொடுத்தல் என்ற பெயரில் வேற்றுமைகளில் ஒற்றுமை காண முயல்வதே மனித இயல்பு...
இஃது உண்மை உறவன்று; தேவையுணர்வால் எழும் எதார்த்த உறவு!
உண்மை இருப்பின் வேற்றுமைகள் தாமாகவே மறைந்துவிடும்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.