ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

உளறல் - 25

மனிதர்களைப் பற்றி என்னுள் எழுந்த சிந்தனைக்கு இன்று ஓரளவு விளக்கம் கிடைத்தது...
ஆண்டவன் நமக்குத் தேவையான நேரத்தில் காட்டும் சில கட்சிகளே நமக்கு உண்மைகளைத் தெளிவாக உணர்த்தும் ஆற்றல் படைத்தவை...


நான் வாழ்க்கையை நூல்களில் தேடிய காலங்களில் பெற்ற தெளிவை விட மனிதர்களிடம் பழகிய காலங்களில் பெற்ற தெளிவே என்னை எனக்கே உணர்த்தியது...


தத்துவங்கள் என்பன நம்மை நமக்கு யாரென்று உணர்த்தும் கருவிகளே...
வாழ்வில் தத்துவங்களைக் கடைப்பிடிப்பதென்பது மனிதரால் இயலாத ஒன்று...
ஆனால் வாழ்க்கையே தத்துவமாக விளங்குவது இயல்பாக நடக்கும் ஒன்று...
இறையருளால் மனித வாழ்க்கையின் பட்டறிவுகளே தத்துவங்களாக உருப்பெறுகின்றன...


எனவே,
பேசுவதற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட தத்துவங்கள் நமக்கு இனிமையாகவே இருக்கும்...
ஆனால் தத்துவங்களாக வாழ்கின்றவர்கள் அனைவருக்குமே இனியவர்களாக இருப்பர்...


மனிதர்கள் தத்துவங்களைப் பேசுவதைவிட தத்துவங்களாக வாழ முயல வேண்டும் என்பதே நமது அவா...
ஆனால் இஃது இயல்பாக நடவாத ஒன்று...
இறையருள் இருந்தால் மட்டுமே இது கைகூடும்...


தேடல்கள் முடிந்து விட்டாலும் இறையருளால் கிடைக்க வேண்டுவன தாமாக நம்மை வந்தடைகின்றன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...