எல்லோரும் ஏதோவோர் எதிர்பார்ப்புடன்தான் நட்பு பாராட்டுகின்றனர்; உறவை வளர்க்கின்றனர்.
உள்ளன்புடன் பழகுகின்றவர்கள் கிடைப்பது மிக அருமையே!
தியாகத்தின் அடிப்படையிலேதான் உண்மையான, உள்ளன்புடன் கூடிய உறவு மலரும்...
எங்கே தியாகம் இருக்கிறதோ அங்குதான் உண்மை அன்பும் இருக்கும்...
இந்தத் தெளிவினைத் தந்த என் உறவுகளுக்கு நன்றி...
வெறுமையை நோக்கிச் செலவினை மேற்கொள்ளும் எனக்குத் தற்சமயம் இறையருளால் உணர்த்தப்படும் ஒரு சில உண்மைகளைப் புரிந்து கொள்ள இயலவில்லை...
ஆனால் உண்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் உணர முடிகிறது...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.