உலக வாழ்க்கையிலிருந்து விரைவில் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது...
என்னால் யாருடனும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் பழக முடியவில்லை.
உலக வாழ்க்கையில் ஒரு நிறைவு ஏற்பட்டுவிட்டது போன்ற ஓர் உணர்வு...
பெரிதாக எதையும் சாதிக்கவில்லையெனினும் அஃது எனக்கு இனி தேவையில்லை என்றே நினைக்கின்றேன்...
மற்றவர்களுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை...
மாந்தர் உறவுகளில் வெளிப்படும் போலித்தன்மையைத் தெளிவாக உணர முடிகிறது...
நான் வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாதவனும் அல்லன்;
தற்சமயம் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அவா கூட இல்லாமல் போய் விட்டது...
எனக்கே மன நிறைவு ஏற்டவில்லையெனின் நான் எதற்காகச் சாதிக்க வேண்டும்?
பிறகு ஏன் இந்த வாழ்க்கை...
ஒரு சிலருக்காக...
நான் வாழும் வரை வாழ்ந்து ஆக வேண்டும் என்ற நிலை...
ஆனால் அனைத்திலிருந்தும் விடுதலை பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த உளறலை நிறைவு செய்கின்றேன்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.