சனி, 13 ஆகஸ்ட், 2011

உளறல் 23

இன்று உடல் நலமும் மன நலமும் ஒரு சேர பாதிக்கப்பட்டிருந்ததால் மிகவும் சோர்ந்து விட்டேன்.
ஆனாலும் மற்றவர்களின் நலன் கருதி என் பணியைத் தொடர்ந்து செய்ய போராடிக்கொண்டிருக்கிறேன்...
என் மீது உண்மையான அன்பு காட்ட, பணிவிடை செய்ய ஒரு சிலர் இருந்தாலும் இறைவனின் விருப்பம் வேறாக இருப்பதை உணர முடிகிறது...
தனி மனிதனாக தனிமையில் நோயுடன் வாடும் போதுதான் இவர்களின் ஆற்றலும் தெரிகிறது; நம் ஆற்றலும் தெரிகிறது.


உள்ளம் உண்மையைத் தேடுகின்றது...
உலகம் பொய்மையை நமக்குக் காட்டும் போதுதான் நம்மால் உண்மையையே உணர முடிகிறது...
இன்றைய உலகில் நல்லவர்களைக் காண்பதே அரிதாகி விட்டது...
நம்மிடையே நல்லவர்களை விட நடிப்பவர்களே அதிகம்....
இஃதும் ஓர் எதிர்பார்ப்புதான்..

எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கைதான் உண்மை வாழ்க்கை என்பதை உணர முடிந்தாலும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு உள்ளத்தில் எழவே செய்கிறது...
உலக மாந்தர்கள் வேற்றுமைகளால் பிணைக்கப்பட்டவர்கள்...
இவர்களிடம் ஒருமை நிலை ஏற்படுவது என்பது அருமையே!
ஒருமை நிலை ஏற்படின் அங்கே இறைமை விளங்கும் என்பதுதான் உண்மை நிலை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...