செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

உளறல் 27 இங்கு எமது சில உளறல்களைப் பதிவு செய்துள்ளேன்... இவை உங்களுக்கு வழிகாட்ட அல்ல... சிந்தனைக்கு மட்டுமே...

அமைதியாகவே இருக்க வேண்டுமென நினைத்த எனக்கு,
சில நிகழ்ச்சிகள் சினத்தை மூட்டியது எனினும்
மற்றவர்களின் நலன் கருதி, நியாய்மாகவும் நேர்மையாகவும் சில முடிவுகளை எடுக்கின்றேன் என்பதே இன்றைய உண்மை நிலை...
மற்றவர்கள் என்னைப் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, நான் உண்மையாகவே நடக்க வேண்டிய நிலையில்தான் இன்னும் இருக்கின்றேன்...
என் இயலாமையை ஏற்றுக் கொண்டு, எந்தவோர் இலக்குமின்றி எங்கோ சென்று கொண்டிருக்கிறேன் என்பதே தற்போதைய என் நிலை...
நமது முயற்சிகள் கடுமையாக இருந்தாலும் நாம் எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும்
இயற்கையின் நியதி (இறைவனின் முடிவு) மிக வலிமையானது என்பதை உணர முடிகிறது...
என்னதான் சினம் கொண்டாலும் அறம் பிறழக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கின்றேன்...
மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக நான் வாழ்வது உண்மையென உணரும் காலம் திண்ணமாக வரும்...
அதற்காகவே எனக்கிருந்த ஒரு மன நிறைவினை இழக்கவும் தயாராக இருக்கின்றேன்...
இறைவனிடம் மற்றவர்களுக்காக நான் உண்மையாகவே வேண்டுகின்றேன்...
இஃது என் மீது சத்தியம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...