கடந்த பல ஆண்டுகளாக நான் கனவு ஆராய்ச்சியிலும் அதனோடு ஒட்டிய காட்சி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளேன். இதனை ஓர் முக்கியமான ஆழுள்ள அறிவியல் துறையாகவேத் தேர்ந்து ஈடுபாடு காட்டி வருகின்றேன். வருகின்ற கனவுகளை மறந்துவிடாத இருக்க அன்றைக்கன்றே ஓர் ஏட்டில் எழுதிவைப்பதுண்டு. இப்படி என்னிடம ஆயிரக்கணக்கில் பலதரப்பட்ட கனவுகள். இபொழுது தேவாரத் திருமுறைகளுக்கும் திருவாய்மொழி போன்ற ஞான இலக்கியங்களுக்கு உரை எழுதும்போது இந்த ஆய்வுப் பெரிதும் உதவுவதையும் காண்கிறேன்.
நமது உள்ளம் மிகவும் சிக்கலானது, கனவுகள் அதனை உணர்ந்துகொள்ள சிறிது உதவுகின்றது என்பது நான் அனுபவப் பூர்வமாக அறிந்த உண்மை. மெய்கண்டாரிலும் தமிழ் இணையத்திலும் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபடுவோர் உண்டு என அறியவர அவர்கள் தங்கள் திறமையைக் காட்டி இத்திறனை வளர்த்துக்கொள்ள உதவியாக சில கனவுகளைத் தேர்ந்து அனுப்ப முடிவு செய்துள்ளேன்.
அவ்வகையில் இன்றொன்று.
பின்னணி: நான் தொழில் அடிப்படையில் தருத்தேர்வின் வழி ஆகமங்கூறி (counselling) பலரின் சிக்கலைத் தீர்க்கின்றவன் (முடிந்தால்!) அதுபொழுது என்னை சந்திக்க வருபவர்களின் பிரச்சினைகளை ஒட்டி அவர்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் எனக்கு சில கனவுகள் வரும்.
கீழே வருவது 35 வயது மதிகத்தக்க ஓர் ஆடவனின் கனவு. இவருக்கு தான் தொழில் செய்யும் இடத்தில் பல சீன நண்பர்கள். தனக்கு இன்னும் திருமணம் நடக்காதிருக்கிறதே என்று கவலை. புராணக் கூறுகள் நிறைந்திருக்க இதனை தேர்ந்துள்ளேன்.
கீழே அதன் பொருளும். வேறு வகை பொறுல் அன்பர்களுக்குப் பட்டால் தெரிவிக்கவும்
1. விசித்ர பயணம்
===========
அ) பல சீனர்களோடு நான் இருப்பது போன்று. பிறகு ஓர் பெண்ணோடு ஓர் விசித்ர உலகு புகுந்து அங்கு அவளோடு நெடுந்தூரம் பயணம் செய்வதாக. ஓர் தெரு முச்சந்திப் போல ஓர் வட்டம் வருகின்றது. அதில் ஓர் கிளையைத் தேர்ந்து அதன்வழி செல்ல , இடையே பல விசித்திரமான காட்சிகள். சற்று தூரத்தில் மாபெரும் ஆறு, ஆனால் எங்களிடையே ஓர் கண்ணாடிச் சுவர் இருப்பதுபோன்று. அந்த ஆற்றின் ஓரத்தில் செங்குத்தாகப் பல பாறைகள். அதில் பல மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகள்! அத்தோடு பாறைகள் நடுவிலிருந்து நீர் பெருக்கெடுத்தோடி அருவி எனக் கொட்டுவதாக.
ஆ) பிறகு கீழே பாறைகளின் ஓரத்தில் காளான் போன்று ஆனால் செவ்வண்ணத்தில் sea-anemone எனப்படும் நீர்பாசிகள். பிறகு மிகப்பெரிய நீர் பாம்புகள் , திமிங்கலம் போன்ற மீன்கள் . . மிக அருகில் தட்டை வடிவிலான பச்சை வண்ணத்துத் தவளைகள்! வற்றையெல்லாம் அதிசயித்துக் கண்டு ஓர் மூங்கில் நெடுங்குடிசை அடைந்து அதன் எல்லைக்குச் செல்ல ஓர் சீன மங்கை வந்து Friendship Card கொடுப்பதாக. அதற்குக் கட்டணமாக சிறிது பணம் கொடுக்க முயல, அதை அவள் வாங்காது கீழே ஓரிடத்தில் கொடுக்கும்படி பணிக்கின்றாள்.
) என்னோடு வந்த பெண்னை அழைத்துக் கோண்டு கீழே செல்ல, அந்தப் பெண்ணிற்குத் தெரிந்த சில சீன மாதர்கள் அங்கு. அவர்களில் ஒருத்தியொடு என்னொடு வந்தவள் குசுகுசுத்தவாறு " என்னை மணக்கபோவதில்லை, தன்க்குத் தெரிந்த இன்னொரு அமெரிக்கனைத் தான் மணக்கப் போகிறேன்" என்று சொல்வது எனக்கு கேட்கின்றது.
கனவின் பொருள் என்ன? எப்படிப்பட்ட பயணம் இது? இங்கே கடல் பாறைகளில் வெடிக்கும் அருவிகள், பாம்புகள் மீன்கள், தவளைகள் என்பவற்றின் பொருள் என்ன?
பொருள்.
கனவு ஆழுள்ள விளக்கக் கனவு. சம்பந்த பட்டவர்களுக்கு தெளிவாக இல்லாதிருக்கும் அவர்களது ஆழ் உள்ளத்தின் போக்கை அவர்களுக்கே தெளிவுறுத்தி விளக்குவது, அதுவழி ஞானம் போதிப்பது. அத்தோடு இதுவோர் நுதிப்பு அல்லது ஆருடக் கனவாகும். எதிர் காலத்தில் நடக்க விருப்பதை இன்றே மறைமுகமாக தெரிவிப்பதாகும்.
ந்த விசித்திர பயணத்தின் விசித்திரமே இந்த ஆடவர் ஒர் கற்பனை உலகில் வீழ்த்தப்பட்டு நிறைவேற்ற முடியாத பல எதிர்ப்பார்ப்புகட்கு ஆளாக்கப் பட்டு பல ஏமாற்றங்கள அனுபவிக்குமாறு ஆட்டப்படுகின்றார் என்பதைக் காட்டும்.
தொடக்கத்திலேயே அந்தப் பெண்ணோடு பயணம் தவறான பாதையில் செல்கின்றது. இயல்பான ஓர் பாதை அல்ல-- செயற்கையாக உருவாக்கப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏற்பட்ட உறவு -- உண்மையான ஈர்ப்பால் அல்ல. இடையே தூரத்திலேயே கடல் அலைகள் ஆறுகள் பொங்கி பொங்கி எழுவது ஆசைகள் அதிலும் குறிப்பாக காம ஆசைகள் எழுந்து அலைக்கழிப்பதுவாகும் . பாறைக்கற்களில் அருவிப் பொங்கி வழிந்தோடுவது, வறண்டு போன உள்ளத்தில் அல்லது அஞ்ஞானம் நிறைந்த உள்ளத்தில் சிறிது அருள் சுரப்பதாகும். சிறிது மகிழ்ச்சியும் ஞானத் தெளிவும் கிட்டுவதாகும்.
மீன்கள் காம எண்ணத்தை மாத்திரம் அல்ல, அதனை மகிழும் சிந்தனை யாகும். மீன் உணவு உடலின்ப தூய்ப்பு. இதேப்போன்றுதான் ஏனையை அசைவ உணவுகளும். ஆனால் இவ்விருவரும் பார்க்கின்றார்கலேத் தவிர, நீரில் நனைவதுமில்லை. அந்த மீன்களை உண்பதும் இல்லை.
பாம்புகள் குண்டலினி சக்தியாகும். ஒருவரோடு ஒருவர் பழக அதனால் காமவேட்கைகள் அரும்பத் தருவது இந்தப் பாம்புகள்.
வகையில் கடற்பூச்சந்துகள் என்பன மனநோய்கள், உடல் நோய்கள் ஆகும். இவ்விருவரின் உறவில் தகாதவொன்று ஏதோ -- குற்றப் மனப்பான்மைத் தாக்க இப்படிப்பட்ட மனநோய்கள் அதனின் உடல் நோய்கள் எழுவதுண்டு.
அடுத்துவரும் பச்சை வண்ணத் தவளகள் உண்மையில் இவர்களை அண்டி ஆதரவை நாடி ஒட்டிக் கொள்ளும் மனிதர்கள் ஆகும். இது இவர்களிடையே இருக்கும் உறவினையும் தெளிவுபடுத்துவதாகவும் அமையும். ஆழமான உயிரோடு உயிர் கலந்தக் காதல் அல்ல, ஏதோவோர் காரணத்தின் பேறில் வேறு வழியின்றி ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக ஒட்டிக் கொண்டிருக்கின்றோம் என்று உணரத் தருவது. ஓர் பொய் அனபில் வாழ்கிறோம் என்று அறியத் தருவது. உண்மையான உளப்புணர்ச்சி இல்லாத பொய் அன்பு வாழ்க்கை
பொழுது ஓர் சீனப்பெண்ணின் ன் வழியாக அந்தப் பயணத்தின் முடிவு வெளியாகின்றது: காதல் இல்லை, இதுவரை அப்படியோர் கற்பனை ஆனால் உண்மையில் நிலவுகின்ற உறவின் சொரூபம் நட்புத்தான் வேறொன்றுமில்லை. அதன் பிறகு என்ன? திருமணம் நடக்காதுதானே போகும்? அது இங்கு அந்தப் பெண் இன்னொருத்தனை மணக்கப்போகிறேன் என்று கூறுவதின் வழி வெளியாகின்றது.
கனவு நடந்து ஏறக்குறைய மூன்று மாதங்களுக்குப் பிறகு இவ்வாறு அந்தப் பெண் இவரிடம் கூறிவிட்டாள். அவருக்கு புரியவில்லை. ஏன் தனக்கு இப்படியெல்லாம் நடக்கின்றதென்று. கடைசி நேரம் வரை திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருந்தார்.
2. புழுவின் வாய்
கானாவியலை அதனோடு தொடர்புடைய புராணவியலை ஓர் அறிவியல் துறையாக நம் சித்தர்கள் வளர்த்துவிட்டுச் சென்றுள்ளதை நாம் மறந்த நிலையில் பற்பல நல்ல வழக்க வழக்கங்குளின் சடங்கு சம்பிரதாயங்களின் பொருளை உணராது அவற்றை மூட நம்பிக்கைபாற் பட்டவையாகவே ஆக்கிவிட்டோம். அதில் ஒன்றே திருமனக்கல் தடைபடுவதற்கு தோஷங்கள் பல வுண்டு என்றும் அவை கிரகங்களில் கூடாத சேர்கையால் வருவதென்றும் அதற்குப் பரிகாரமாக இந்த பூசை அந்த பூசை என்றுகூறி பணம் பரிப்பதையே ஒர் தொழிலாகக் கொண்டு விட்டதை இப்பொழுது நான் பார்க்கின்றோம்.
ளைஞர்களுக்கும் இப்படிப்பட்ட தோஷங்கள் உண்டு அதற்குப் பரிகாரம் ஆழ்வுள்ளத் தெளிவும் அதனை ஒட்டி எழும் சில செயலகளுமே என்பதாக கீழ்வரும் கனவும் அதன் பொருள் விளக்கமும் உணர்த்தும்.
அந்தக் கனவு சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வந்தது-- ஆகமங் கூறுவதோடு தொடர்புடையதாக. சம்பந்தப்படவர் ஓர் இளஞர். அவர் பிரச்சினையெல்லாம் தனக்கு தனை நலமே நேசிக்கும் ஓர் காதலி அமையாது தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. பெண்கள் இவனிடம் சிறிது பேசிவிட்டால் போதும், அடுத்தமுறை பேசாதே போய்விடுவார்களால்ம். தருத்தேர்வின் வழியும் அதற்கு உதவிய இக்கனவின் வழியும் பரிகாரம் காணப்பட்டது.
கனவு:
=====
என் அறையில் ஓர் சிறுவனை சோதித்தவாறு ஓர் வைத்தியர். அவனுக்கு ஏதோவொரு நோய். அவனை மடியில் கிடத்தி சிரிப்பாக ஏதோ சொல்லியவாறே அவன் மலம் வெளியாக்கி இருக்க, அதனை சோதித்துப் பார்க்கிறார். ஒன்றுமில்லை, சுத்தமாக இருக்கின்றது. ஆனால் வாயை சோதிக்க அங்கு நாங்கைந்து நீண்ட புழுக்கள்! அவற்றை கையால் இலாவகமாக எடுத்து வெளியாக்கி என்னிடம் தர நான் அவற்றை வெளியேக் கொண்டுபோய் தூக்கி வீசிடச் செல்ல, வாசலில் ஓர் பெரிய மலைப்பாம்பு தன் தலையை நீட்டியவாறு. அங்கே இந்த புழுக்களை போடுதற்கு பயம். ஆக வெளியே போக அஞ்சி பக்கத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவதாக!
பொருள்:
=====
புழுக்கள் மலத்தில் இல்லாது வாயில் இருக்க, இவனது வாயில்தான் பிறைரைத் துன்புறுத்த்ம் நோய். உளம் சுத்தமானது என்றா¡லும் பேச்சு அவ்வளவு சுத்தமானது அல்ல. எப்போதும் கடு கடுப்பு. பெண்களிடம் இனிமையாகவே பேசத் தெரியாது என்பதொடு கடுஞ் சினம். தப்பாக யாறாவது சொல்லிவிட்டால் கொலைவெறி போன்ற வெறி வரும். சிலரிடம் இவ்வாறு சண்டை போட்டதும் உண்டு. அத்தோடு நண்பர்களோடு குடிக்கும் பழக்கமும் உண்டு. அப்போது கொச்சை வார்த்தைகள் மிகத் தாரளமாக வாயிலிருந்து கொட்டும். இணக்கமாக யாருடனும் பேசத் தெரியாது , எப்பொழுதும் சண்டை சச்சரவுகளை நாடிச் செல்வது. மிகக் கூர்மையான அறிவு ஆனால் எப்போதும் விணே பிறரிடம் குறை காணுவதும் தன்னைப் அவர்கலுக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் பீத்துவதும்தான்
அந்தப் புழுக்களை வாயிலிருந்து நீக்கும் டாக்டர் நான் தான். தருத்தேர்வின் வழி இந்த குணாதிசயங்களை அவன் உணரச் செய்து தெய்வங்களின் உதவியால் அவனிடம் அவை இல்லாது போக்கச் செய்தல்தான் நான் செய்யக்கூடியது. நெடு நேர உரையாடல் -- அவன் என்ன பேசுகின்றான் எப்படிப் பேசுகின்றான் என்றெல்லாம். அவனது இந்தக் குணத்தை அவனே உணரச் செய்வதே சிகிச்சை, அதுவே அந்த புழுக்குகளை வாயிலிருந்து அகற்றி குப்பைத் தொட்டியில் போடுவது.
அங்கு வரும் மலைப்பாம்பு அவனை விரும்பத்தொடங்கும் ஓர் இளம்பெண். காதலின் வரு காமவுணர்வுகளை எழுப்பவல்லவள், அதன் வழி குண்டலி சத்தியை ஊட்டுகின்றவள்! அதனைத் தேடித் தானே அவனது ஏக்கம்?
3.
அன்பர்களே,
அடுத்துவரும் கனவு ஓர் நெடியக் கனவு. பல புராண நுட்பங்களைக் கொண்டிருக்க நான் பலகாலும் ஆய்ந்து தெளிந்தது. இங்கு சுருக்கமாகவேத் தருகின்றேன்.
அந்தக் கனவிற்கு உரியவர் ஓர் 25 வயது மதிக்கத் தக்க இளைஞர். இவரது பள்ளி காலத்து காதலி ஓர் கிரித்துவப் பெண். இவன் தொழில் பயிற்சிக்கு வேறோர் ஊர் செல்ல இவள் ஆசியப் பயிற்சிக்கென ஓர் ஆசிரியப் பயிற்சி கல்லூரிக்க்குச் சென்றுவிட பல மாற்றங்கள் வருகின்றன. அதனை விளக்குவதாக் இக்கனவு.
கனவு: சைக்கள் இழப்பு
============
என் காதலி கருப்பு உடை தரித்து வீடுபோல் தெரியும் ஓரிடத்தில் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருக்கின்றாள். அவள் தந்தையோடு பல ஆடவர்கள் வெளியே சூழ்ந்திருக்க நான் ஓரப்பக்கமாகச் சென்று பின்பக்கம் நுழைந்து சுற்றி வந்து பிறகு வெளியாகி முன்பக்கம் வந்து நிற்க ஏதோ நடக்க, என் சைக்கிளை வீட்டு முகப்பில் விட்டு விட்டு சில சீனர்களோடு செல்வதாக. அந்த சீனர்களோ மிகவும் நல்லவர்களாக முன்பு காணாமற் போன என் சைக்கிளை மீட்டு நன்றாக பழுதுபார்ர்த்துக் கொடுக்க அது சிவப்பு நிறத்தில் நவீனமான ஒன்றாகவும் மிக உறுதியாகவும் விளங்குவதைக் கண்டு மன மகிழ்கிறேன். கூலி யாதும் கேட்காமலேயே அதனை என்னிடம் கொடுத்துவிட்டு அகன்றுவிடுகின்றார்கள்.
அப்பொழுது மீண்டும் என் காதலி வீட்டிற்கு திரும்பி அங்கு விட்டுச் சென்ற சைக்கிளைத் தேடுகின்றேன். காணவில்லை. இங்குதான் இருக்கும் பத்திரமாக எடுத்து வைத்திருப்பார்கள் என்று சிலர் கூற நானும் வீட்டைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கும் சிலரைத் தாண்டி பின்பக்கம் சென்றுத் தேட அங்கும் இல்லை. பிறகு மீண்டும் முன்பக்கம் வந்து பெரும் கவலையோடு நிற்க ஓர் ஆடவர் என் துன்பத்தைக் கண்டு ஓர் விவரத்தைத் தருகின்றார். நான் விட்டுச் சென்ற சைக்கிளை யாரோவோர் கலியான சுந்தரம் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூற நான் மலைத்து நிற்கின்றேன்.
பொருள்:
=======
வாகன இழப்பு என்பது வாழக்கைக்கு அடிப்படையாக இருக்கும் ஓர் ஆதாரத்தின் இழப்பு ஆகும் . இங்கு அந்தப் பெண்ணின் துணை. ஆயினும் இதற்குக் காரணமே இதைவிட இன்னொரு துணை வருவதுதான். அந்தப் பெண்ணிற்கும் அவனுக்கு உதவாது என்று தெய்வ சக்திகளே வேண்டிய மாற்றங்களிக் கொண்டு வருவதாகும்.
அந்தப் பெண் கருப்பு ஆடையில் , கவுனில் தோன்றுவது கன்னிப் பெண்ணாகவே திகழ்வதைக் காட்டும். நெறியில் விளங்கும் கருப்புப் பொட்டும் இந்த பொருளையே உடையது. நெற்றியில் செந்தூரம் ஏறிவிட்டால் அவள் கண்னிப்பெண் அல்ல, மணதில் ஒருவனை கனவனாகக் கொண்டிருப்பவள் என்று பொருள் படும். ஆக இருவருக்குமிடையே உண்மையான காதல் அன்பில்லை. காமத்தால் வரும் கவர்ச்சியே காதலாக் தவறாக உணரப்பட்டுள்ளது. சிவப்பு சைக்கிளைத் தரும் சீனர்கள் தெய்வ சத்திகள். அவனது உண்மையான அன்பு வேறோர் பெண்ணுடன் இருக்கின்றது என்று தெளிவித்து இந்தப் பொய்காதல் வேண்டாவென உணர்த்துவதாகும்
ந்த இளஞனுக்கோ அந்தப் பெண்ணிற்கோ கலியான சுந்தரம் என்று யாரையும் தெரியாது. ஆனால் சோமசுந்தரனாகக் தோன்றும் இறைவனது இன்னொரு பெயரே 'கலியான சுந்தாம்' என்பதை தெரிந்திருந்த நான் அவ்வகையில் அந்தப் பொருளை சொல்ல், அந்த இளஞனுக்கு புரியத் தொடங்கியது. அந்தப் பெண்ணோடு இவனுக்கு திருமண வாழ்க்கை யில்லை, இன்னொரு பெண்ணோடுதான்.யாவளுகும் இன்னொருவனோடுதான். தொடக்கத்தில் கவலைப் பட்டாலும் அப்படித்தான் நிலவரம் இருக்கின்றது என்று கூறி தன்னை அமைதிப்படுத்திக்கொண்டான்.
விளக்கம்.
=========
கலியாண சுந்தரனாகிய சோமசுந்தரன் மதுரை மீனாட்சியை நாரணன் தாரைவார்த்துத் தர கடிமணம் புரிகின்றான். இதுவே மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பண்டிகையாக இன்றளவு கொண்டாடப் படுகின்றது. திருவிளையாடற் புராணத்தில் இதன் விரிவெல்லாம் கிடைக்கும். இதன் பொருள் என்ன?
நாம் எப்படித்தான் முயன்றாலும் திருமணம் என்பது தொல்காப்பியர் அன்றே விளக்கியுள்ளதுபோல தெய்வ சங்கற்பத்தால்தான் ஆகும். இறைவனே உள்நின்று காட்டத்தான் " ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப". இதனையே மந்திராயணத்தில் 'அ-உ-ம்' என்பதின் பொருள் என்றும் பகர்வர். இங்கு அகாரம் பெண்மை, உகாரம் ஊந்து செல் திறத்தின் ஆண்மை. மகாரமாவது இரண்டையும் மயங்கவைப்பது அதாவது இணைய வைப்பது. இங்கு அகாரமாக மதுரை மீனாட்சி, உகாரமாக கலியாண சுந்தரன் வடிவில் சிவபெருமான், இவர்களை இணத்து மயங்கச் செய்வபன் நாரணனாகிய திருமால். தாரை வார்க்கப்படும் நீர் குண்டலினி சக்தி அதாவது காமத் தூய்ப்பிற்கு உதவும் வீரியம்
நல்லமுறையில் நடக்கும் ஒவ்வொரு திருமணமும் இப்படித் தான் நடக்கின்றது என்பதாக இப்புராணம் விளக்கும். அதனோடு தொடர்புடையதாக இக்கனவும்.
4.
கனவுகள் பலவகைப்படும். எல்லாமே எதிர்காலத்தை இன்றே அறியத்தரும் நுதிப்பு அல்லது ஆருடக் கனவுகள் அல்ல. ஆழ்விளக்கக் கனவுகள் என்பன, ஒருவனுக்கு அவனையே புரிந்துகொள்ள உதவும் கனவுகள். பெரும்பாலும் இவை எந்தப் பக்குவதில் அவன் இருக்கின்றான் என்று உணர்த்தி தெளிவு தருபவை.
கீழே வருவது மிக அரியவொன்று, சமயஞ் சார்ந்த வாழ்க்கையின் பல நுட்பங்களை விளக்குவது.
தனைக் கண்டவர் கோலலாம்பூரில் வசிப்பவர், ஓர் தொழிற்சாலையில் உயர் பதவி வகிப்பவர். பழுத்த சைவர், சைவ சித்தாந்தத்தில் நல்ல புலமையுண்டு என்பதோடு ஓர் கோயில் வழி நிறையத் தொண்டு பணிகளைச் செய்து வருபவர். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி அவர்களையும் நன்றாக வளர்த்துவிட்டவர். குடும்பத்தில் குழப்பம் என்பதெல்லாம் இல்லை. ஆயினும் இந்தக் கனவு வர, அதன் பொருள் தெரியாமல் போக, என்ன சந்தித்து நெடு நேரம் இதைப்பற்றி உரையாடி சென்றார்.
கனவு: விரதம்
=========
நான் அங்குமிங்கும் அலைந்துவிட்டு ஓர் படுக்கை அறைக்கு ஓர் கட்டிலைத் தேர்ந்து படுக்கச் செல்கின்றேன். சொகுசான மெத்தை உடைய சுவரோர கட்டிலைத் தேர்ந்து அதில் படுத்துகொள்ள வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும்போது , ஓர் அழகிய மலாய் இளமங்கை, காமக் கவர்ச்சி மிக்க ஒருத்தி பக்கத்து படுக்கையில் இருப்பது தெரிக்கின்றது. ஆனால் படுக்கையில் படுக்கப்போகும் போது அங்கே எனக்கு முன் ஓர் மலாய் இளஞன். இது எனது படுக்கை ஆயிறே என்று நான் சொல்ல, நீ யார் ? இதற்கு உரிமை கொண்டாட? என்று அவன் கேட்க, அந்தப் பெண் என்னைத் தெரிந்தவளாக என்னைப்பற்றிச் சொல்லியும் அவன் அகலாதிருக்க, நான் வேறொரு படுக்கைத் தேடுவதாக. ஆனால் எல்லாமே வேறு பல இளைஞர்களால் எடுக்கப்பட்டிருக்க, நல்ல படுக்கையைத் தேடி இன்னும் உள்ளே உள்ளே செல்கின்றேன்.
கழிவறைகளைத் தாண்டி இன்னும் செல்ல, ஓர் திறந்தவெளி உணவகம் வருகின்றது. ஆர்வமில்லை. இன்னொரு வழியில் செல்ல வழி நெடுக மிக நவீன மதுபானக் கடைகள்-- ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருப்பது போன்று. ஓர் அறையில் அழகிய தமிழ் இளம்பெண்கள் ஆனால் மேற்கத்திய உடையில். மதுபானம் அருந்தியவாறு மிக மகிழ்ச்சியாக உரையாடிவாறு. அடுத்த இன்னொரு அறையில் வெள்ளை இளம் பெண்கள் பலர் அவ்வாறே. இன்னொரு அறையிலும் இவ்வாறே. ஆனால் இவற்றைக் கண்டும் கவரப்படாது நேராக நடந்து வெளியே வந்து விடுகின்றேன்.
பொருள்
========
மேற்போக்காக பார்க்கும்போது, தொழிற்சாலையில் செய்யும் வேளைக்கு ஏதோ பங்கம் வருமென்றும் அதனால் புதிய வேலைகளுக்கு தேடித்திரிய வேண்டியதாய் இருக்கும் என்றும் படும். அப்படித்தான் அவர் நினைத்தார். ஆயினும் இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கமே இல்லை. மேலும் இப்படிப்பட்ட ஓட்டல் உண்மையில் இருக்கமுடியாது என்றும் பட மறுமாற்றுப் பெயர்ப்பு வழியாக பொருள் கண்டு விளக்கினேன்.
முதலில் ஒர் படுக்கையில் படுக்க விரும்புவது அதுவும் காமக் கவர்ச்சி பெண்ணுக்கு அருகில் என்பது இல்லற வாழ்க்கையில் இன்னும் தொடர்ந்த இருக்க விரும்பது ஆகும். ஆனால் அது அமையாதுப் போகின்றது. ஓர் பெண்ணோடு தன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் களைக்கபடுகின்றது. ஆனால் அதற்குப் பதிலாக வேறொன்று வேண்டுமே?
தேடிச் செல்கின்றார். உணவகம் என்பது உலகியல் போக வாழ்க்கை. நண்பர்களோடுப் பழகி உரையாடி பொழுது போக்குவது. அப்படிப்பட்ட வாழ்கையும் அவருக்கு ஏற்புடைத்தாக இல்லை.
மதுபான மங்கையர் இருக்கும் அந்த சொகுசு அறைகள், பெண்களின் கவர்ச்சிக்கு அடிமையாகி அவர்கள் தரும் காமக்கிளர்ச்சி போதைகளுக்கு மதி மயங்கி ஓர் நாய் போல் அவர்களை வேட்டுத் திரிவது. அப்படிப்பட்ட வாழ்க்கையும் அவருக்குப் பிடிக்கவில்லை. வெளியேறி விடுகின்றார்.
ந்த வெளியேற்றம்தான் அதுவும் ஓர் நிம்மதியோடு, மிக முக்கியமானது. இவருக்கு உலகியல் வாழ்க்கை அதில் வரும் இன்பங்கள் வெறுத்துவிட்டது ஆக துறவியல் வாழ்க்கை அமைகின்றது.
தன் பொருளை இப்படிச் சொல்ல, பெரும்பாலும் ஒத்து வருகின்றது ஆனால் சில விசயங்களில் அல்ல என்றார். அவருக்கு வயது ஓர் 47 இருக்கும். அவருக்கு பெண்கள் மேல் வெறுப்பில்லை. உலகிலிருந்து ஓட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. மாறாக நல்ல பல பெண்கள் உட்பட பலரோடு சேர்ந்து கோயில் வழி மக்களுக்கு நல்ல பல செய்துகொண்டே இருக்கவேண்டும், அப்படித்தான் என்னுடைய வாழ்க்கை இருக்கின்றது என்றார். ஆனால் காமம் முன்பு போல் இல்லை, கவர்ச்சிக்காட்டும் பெண்களைக் கண்டு தான் மயங்குவது முற்றிலும் குறைந்துவிட்டது என்றார். காமைன்பம் தூய்க்காமலேயே தன்னால் எந்தப் பிரச்சினையுமின்றி வாழமுடியும் என்றார்.
விளக்கம்:
==========
எல்லா சமயங்களும் மதுபானத்திற்கு அடிமையாக கூடாது என்கின்றன. அதன் மெய்ப்பொருள் காமக்கவர்ச்சிக்கு ஆளாகக் கூடாது என்பதுதான்.
மேலும் எல்லா சமயங்களும் விரதங்களையும் நோன்புகளையும் வற்புறுத்துகின்றன. அதன் மெய்பொருள் உலக இன்பங்களில் முற்றிலும் ஆழ்ந்து தேவையில்லா உரையாடல்களில் பழக்க வழக்கங்களில் நேரத்தை பொழுது போக்கு என்ற பெயரில் வீணடிக்கக்கூடாது என்பதாக இருக்கலாம். ஒருவன் அளவிற்கு மீறிய போகியாக இருக்கக்கூடாது எதிலும் ஓர் நிதானம் வேண்டும் என்பதாக் இருக்கலாம்.
ன்னொன்று:
=========
ந்தக் கனவை இவர் ஆன்மா பக்குவமடைந்து உடற்பற்று நீங்கி விட்டார், மாயாமலம் வென்றுவிட்டார் என்று காட்டுவதாகவும் கொள்ளலாம். மேற்கொள்ளும் பயணம் தன் உடம்பினுள்ளே இவர் ஆன்மா செய்யும் பயணமாக இருக்கலாம்.
5.
அன்பர்களே,
எல்லோருக்கும் உண்மையானக் கனவுகள் வருவதில்லை. அதற்கும் கொடுத்து வைத்திருக்கவேண்டும்போல் தெரிகின்றது. இத்தன்மையோருடைய இலக்கணமும் இன்னும் எனக்குப் புரியவில்லை. இனிமேல்தான் அவற்றையெல்லாம் ஆய்ந்துத் தெளியவேண்டும். நான் இலண்டனில் இருக்கும் போது எனது நண்பராக விளங்கிய ஓர் செட்டியார் தமிழக கிராமத்தில் அவரது பாட்டி நன்றாக கனவு காண்பவ்ர் என்றும் ஊர் மக்கள் தத்தம் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி கனவு கண்டு அவர்களுக்கு வழிகாட்டச் சொல்வார்களாம். ஆக சிலருக்கு இந்தத் திறமை இயல்பாக இருக்கின்றது போலும்.
அது அவ்வாறிருக்க நாம் தொடர்வோம்.
ந்தக் கனவு பினாங்கில் இருக்கும் ஓர் இளைஞருடையக் கனவு. அடிக்கடி என்னை சந்திப்பவரும் ஆகும். வயது 30போல, திருமனத்திற்கு பெற்றோர்களின் சம்மதத்தோடு ஓர் பெண் இருக்கின்றாள். அவளுக்கு வயது ஏறக்குறைய 20 இருக்கும். இருவரையும் நான் சந்தித்ததுண்டு. பிரச்சினை என்னவென்றால், அவளுக்கு திருமணத் தேதியைக் குறிக்க மனம் வரவில்லை. இதைப்பற்றி அந்த இளைஞர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது இந்தக் கனவு வந்து அவருக்கும் மேலு கவலையை உண்டாக்கியது.
கனவு: தடை
=========
அந்தப் பெண் மிகவும் வேகமாக மணப்பெண் கோலத்தில் வந்து கதவினை உடைத்துக்கொண்டு வருவதுபோல் உள்ளேப் புகுந்து எனக்கு மணமாலை அணிவிக்க முயல்கின்றாள். அவள் அவசரத்தையும் வேகத்தையும் கண்டு எனக்குத் திகைப்பாக இருக்கின்றது. இப்படி மாலை அணிவிக்கக்கூடாது, பொறுமையும் நிதானமும் வேண்டும் என்று கூறி அவலை அமைப்படுத்தி வீட்டினுள் கொண்டு செல்கின்றேன். ஆனால் உள்ளே சென்றதும் அவள் வேடம் மாறுகின்ரது. இப்பொழுது வெளிறிய மஞ்சள் புடவை உடுத்திக்கொண்டு, நான் குளித்துவிட்டு வருகின்றேன் என்று எழுந்து போய் விடுகின்றாள்.
பொருள்:
========
திருமனத்திற்கு வேண்டிய அன்பினை அந்தப் பெண் இன்னும் வளர்க்கவில்லை. உண்மையா அன்பு இன்னும் வளரவில்லை. திருமணக் கோலத்தில் வருவது அவசரம் அவசரமாக மாலை அணிவிப்பது எல்லாம் ஒப்புக்காக, பெற்றோர்கள் வற்புறுத்துதல் காரணமாக இருக்கலாம். ஆனால் இது அவனுக்குப் புரியவர அவளை நிதானப் படுத்துகின்றான்.
ந்த நிதானமே அவள் தன்னைப் பற்றிய உண்மையை உணரவைக்கின்ரது. தான் பொய்யாகத்தான் அவனை மணக்க சம்மதம் தெரிவிப்பதை உணர்கின்றாள். இதனால் தன்னிடம் உள்ள இந்தப் பொய்மையை குளித்து கழுவி போக்கிவிட்டுத்தான் திரும்பி வரவேண்டும் என்று முடிவு செய்கின்றாள்.
வெளிறிய மஞ்சள் புடவை சந்நியாசினிப் போன்ற மனநிலை. இதுவே மிக முக்கியமானது. அந்தப் பெண்ணால் அந்த இளைஞனை நோக்க காம எண்ணம் வரவில்லை ஆக தழுவி மகிழ்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையான அன்பு இருந்தால் உடை செம்பட்டாக வரும்.
தனை தெரிவிக்க அந்தப் பெண் மிக மெதுவாக ஒப்புக்கொண்டாள். ஏனென்று தெரியவில்லை என்றும் கூறினாள். ஆனால் அவள் அடிக்கடி மிகவும் சுதந்திரமாக வாழவேண்டும் என்று கூறிக்கொண்டே இருக்க இதுதான் பிரச்சினை என்றும் உணர்ந்தேன். திருமண வாழ்க்கை அவளைக் கட்டிப்போட்டு சுதந்திர இழப்பிற்கு காரணமாகிவிடும் என்றவோர் அச்சம் அவள் உள்ளத்தில்.
ருவரும் பிரச்சினையின் மூலத்தை இந்தக் கனவின் வழி புரிந்துகொள்ள இப்பொழுது நிலமை நன்றாக வளர்ந்து வருகின்றது. விரைவில் திருமணம் நடக்கலாம். உண்மையான அன்பு இருக்கும்போதும் அதற்குக் கட்டுப்பட்டு வாழும்போதும், அது சுதந்திரமாக செயல்படுவதற்குத் தடையாக இருக்காது என்று நான் கூறியது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது
6 கனவு: வாலைப்பெண்
அன்பர்களே,
கனவுகளில் மிகப் பழமையானதும் உலகெங்கிலும் உள்ளோருக்கு வருவதும் பொருள் நிறைந்துமாக இருப்பது வாலைப்பெண் வாலையாண் கனவுகளாகும். எனக்கு இப்படிப்பட்ட கனவுகள் வரும். திருமணமாகி குழந்தைகள் உள்ளோருக்கு இக்ககுழந்தைகளாகவே கனவில் இவர்கள் வருவார்கள். ஆனால் இதுவும் சில பன்புகளை உடைய ஓர் ஆணும் ஒர் பெண்ணும் தான். அல்லது குண்டலினி எடுக்கின்ற வடிவங்களில் இதுவும் ஒன்றாகும். கனவு இரண்டில் (புழுவின் வாய்) வரும் மலைப்பாம்பு உள்ளபடி ஓர் இளம்பெண். இந்தக் கனவின் பொருளை மறுமாற்று விதிகள் கொண்டு ஆராயாதுவிட்டு எப்படிக் காட்டபடுகின்ரதோ அப்படியேக் கொண்டு வாசலில் ஓர் பாம்பை எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போக நேரிடும். கனவுகளைப் பற்றிய அவநம்பிக்கை இப்படிப்பட்ட பிழையுணர்வுகளால் வருவதே.
கீழே வருவது ஓர் 30 வயது இளஞனுக்கு வந்தது. ஒர் பட்டதாரிப் பெண்னை காதலித்து மணம் புரிந்திருந்தாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மணமுறிவு. மிகவும் சோர்ந்துப் போனவர் வாழ்க்கையில் இன்னொரு பெண்னை சந்திக்க, அவளை மணந்துகொள்ளலாம் என்று எண்ணியவாறு இருக்கும் அதுபோது இந்தக் கனவு அவருக்கு வந்தது
6: கனவு: வாலைப்பெண்
=================
பல நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கடற்கரை ஓரமாக இருக்கும் இவளது பலகை வீட்டிற்குச் சென்று உள்ளே புகாது வெளியிலேயே ஓர் easy chair-இல் படுத்தவாறு ஓய்வெடுத்துக்கொள்கிறேன். உள்ளே அந்தப் பெண்ணின் சகோதரிகளும். ஒருத்திக்கு மாப்பிளைப் பார்த்தாகிவிட்டது. அவரும் காரில் வந்துபோவதுபோல். என் சிந்தையெல்லாம் நான் விரும்பும் அந்த அழகிய பெண்னைப் பற்றி. பிறகு திடுமென எழுந்து நிற்க ஓர் அழகிய சிறுமி என் கரம் பற்றுவது போல. பிறகு நானும் துணிந்து அவள் தாயார் கண்டவாறு இருக்க அவள் கரம்பற்றி அந்த நுண்மணல் நிரம்பிய மேட்டில் நடந்து சென்று பிறகு பள்ளத்தாக்குப் பக்கம் இறங்குவதாக.
அங்கு பல மலாய்காரர்களின் இல்லங்கள் -- உயர்ந்து நிற்கும் கால்களைக் கொண்டவையாக. உன் தாயார் உங்கள் இல்லத்தை இப்படிக் கட்டி இருக்கலாமே என்று நான் கூறுகின்றேன். பிறகு அவ்வாறு நடந்து செல்லுகையில் பின்பக்கம் நான் இதுவரை பார்த்திராத ஓர் பெருங்கோயில் கோபுரத்தை காண்கின்றேன். ஈர்க்கப்பட்டு அந்த சிறுமியோடு செல்ல, ஓர் சதுர வடிவத்து மதில்களால் மறைக்கப்பட்ட கோயில். உள்ளே பல பிரகாரங்கள். இடது பக்கச் சுவரில் திருமுருகன் வள்ளி தெய்வானையோடு இருப்பது நன்றாகத் தெரிகின்றது. ஏனைய பிரகாரங்கலிப் பற்றி தெளிவில்லை.
பொருள்:
=======
ந்தக் கனவின் திணைநிலம் நெய்தல் என்பதொடு இவர் அங்கே நிம்மதியாக் ஓய்வும் எடுத்துக்கொள்கிறார். ஆக இதுவே அவர் மனவுலைச்சல்களுக்கு ஓர் மாற்று வந்துவிட்டது என்பதை உணர்த்தும் . நெய்தல் நிலம் இரங்குதற்குரியது என்பார் தொல்காப்பியர். இதனை இறைவன் கருணைக் காட்டி சிறிது இன்பம் தருவது என்பதாகக் கொள்ளலாம்.
அந்தச் சிறுமி , வாலைபெண் அவர் விரும்பும் அந்த அழகிதான். ஏன் சிறுமியாக வரவேண்டும்? குண்டலினி ஈட்டம் தரும் ஓர் சக்தியாக அந்தப் பெண் அவருக்கு அமைய அது இப்படி கனவில் காட்டப்படுகின்ரது. தனது அழகாலும் அன்பாலும் காட்டும் பரிவினாலும் இவருக்கு குண்டலினிப் பாய்ச்சி இன்பம் தருகின்றவள். அவளை நினைக்க நினைக்க பழையக் கவலகள் எல்லாம் போய் விடுகின்ரது, ஓர் புதிய உற்சாகம் வருகின்றது.
தாயார் காண அவள் கரம் பற்றுவது அவளும் அவ்வாறு செய்வது இருவருக்கும் திருமணம் கூடிவருவதாகக் கொள்ளலாம். அம்மன் அருள் இருக்க இவ்வாறு.. கரம் பற்றுவதாவது உள்ளங்கள் இணைதல், மணம்புரிந்து வாழலாம் என்ற அளவிற்கு இருவர் உள்ளமும் ஒத்துப்போதல்.
ருவரும் அந்த நெய்தல் நிலத்தில் நடத்தல் என்பது இவ்வாறு அன்பினால் கட்டுண்ட காதல் வாழ்க்கையை மனவுற்சாகத்தோடு நடத்தல். ஆயினும் இது அவருக்கு ஞானவிழிகளைத் திறந்து விடுவதாகவும் அமைந்துவிடுகின்றது. இவளோடு நடை பழகும்போதுதான் மறைவாக இருந்த கோயில் தென்படுகின்றது, உள்ளேயும் புகுகின்றார். அங்கே வள்ளி தெய்வானை சமோதரராய் திருமுருகன்!
துவும் பொருள் உள்ளதுதான். காதலித்து முதலில் மணந்த அவளோடு சட்டப்படி மணமுறிவு என்றாலும் அவளோடு கூடிய உறவு வேறொரு வகையில் தொடரும் என்பதைக் காட்டும். தன்னை இறுகப் பற்றித் தழுவும் வள்ளிக்கொடியாக இந்த புதுப்பெண் இருக்க, தெய்வானையாக ஓர் நட்பு முறையிலும் உள்ளத்தளவில் இன்னும் இவனுக்கே மனைவியாகவும் முத்தவள் தொடர்வாள் என்பதையும் காட்டும்.
ந்த விளக்கத்தைக் கேட்ட பின் அந்த இளைஞர் அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார். ஓர் 18 வயது மதிக்கத்தக்க அந்த மங்கை தெய்வமே வடிவெடுத்து வந்தாற்போன்று அப்படிப்பட்ட ஓர் அழகோடும் குறும்போடும் தென்பட்டாள்! ஆமாம் இப்பட்டவள் தான் ஓர் வாலைப்பெண்ணாக இருக்கமுடியும் என்று நினைத்துக் கொண்டேன்!
7: கனவு: காமப்புணர்ச்சி
அன்பர்களே,
கனவுகளில் இன்னொரு வகை காமஞ்சான்ற கனவுகள். இதனைத்தான் நம் சி. கு. அவர்கள் தாவணிக் கனவுகள் என்றார் போலும். இக்கனவுகள் பெரும்பாலாரது ஆழ்வுள்ளத்து வேட்கையைத் தொடுவதாக இருப்பதால் அவர்களது கவனத்தை ஈர்க்கின்றன என்பதொடு நினவில் வைத்துக்கொண்டு அதுபோல் நடக்காதா என்ற ஏக்கத்தையும் விளைவிக்கும். ஆயினும் இங்கும் இத்தகு கனவுகளின் பொருளை சரிவர பெயர்த்து அறியாததால் வரும் பேதலிப்புக்கள்தான் அதிகம். பேராசியர் யுங் (C.G Jung)அவர்கள் இத்தகு கனவுகள் உள்ளத்துப் புணர்ச்சியையே உடல் புணர்ச்சி வழியாக காட்டுகின்றன என்பார். நம் சித்தர்கள் ஆண்-பெண் அன்பில் நூறு படிகள் இருக்கின்றன என்று கூறி அவற்றை விளக்குவர். இதனோடு இன்னொன்றையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். மெய்யான காமப்புணர்ச்சி அமையாதாருக்கு இத்தகு கனவுகள் வழி பொய் காமப்புணர்ச்சி அனுபவங்களைத் தந்து குண்டலினி சக்தியைப் பாய்ச்சி உடல் தளர்ச்சி மனத்தளர்ச்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதும் நடக்கும். இத்தகு கனவுகளுக்குப் பொருள் இல்லை. அந்தக் கனா அனுபவமே அதன் நோக்கு.
கீழே பொருளுள்ள இத்தகு இரண்டுக் கனவுகள் -- உள்ளம் சம்பந்தப்பட்ட விசயங்கள் உடல்கள் வழியாக உணர்த்தப் படுபவை
முதற் கனவு திருமணமான ஓர் 30 வயது மதிக்கத்தக்க மாதினது. ஆசிரியையாக பல ஆண்டுகள் பணி செய்து அறிவியல் வளாகத்தில் படிக்க வர அதன் பொருட்டு கணவர் குழந்தைகளிடமிருந்து பிரிந்திருப்பது. கனவில் வரும் ஆடவரும் அப்படிப்பட்டவர் தான் , உடன் படிப்பவர்.
ரண்டாம் கனவு ஓர் இளஞனது, தன் காதலியைப் பற்றி
கனவு 1: சபலம்.
நான் என் படுக்கை அறையில்; படுத்திருக்கின்றேன். இருட்டாக இருக்கின்றது. சுவர் ஓரம் இன்னொரு கட்டிலில் அவர் படுத்திருக்கின்றார். திடுமென காமவேட்கை மிகுந்தவராய் என்னை எழுப்பி கட்டி அணைத்துப் புணர முயல்கின்றார். நானும் சிறிது இடங்கொடுப்பதும் தயங்குவதுமாக. ஆனால் முடிவில் மனம் இடந்தராது போக ஒத்துழைக்க மறுக்கின்றேன். அந்த சமயம் பார்த்து வெளியில் பலர் வருவது போன்று சப்தம். இதனால் நான் என்னை விடுவித்துக் கொள்ள அவர் என்னை விடுவிக்கின்றார். ஆனால் அவர் ஆண்குறியிலிருந்து சுக்கிலம் வெளியாகுவதைக் காண்கிறேன். பிறகு அவர் தன் படுக்கைக்கே போய் விடுகின்றார். பெரிய ஏம்மாற்றம் அடைந்தவர் போன்று அவர் முகம்.
கனவு 2: மெய்க்காதல்
நான் தனியாக படுத்திருக்கின்றேன். திடுமென நான் விரும்பும் அந்தப் பெண் யாருக்கும் தெரியாது வந்து என்னோடு படுப்பதாக. பிறர் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக ஓர் போர்வையை இருவர் மேலும் கிடத்துகின்றாள். பிறகு தன் ஆடைகளை கழற்றி அம்மணமாகி என்னையும் அம்மணமாகி ஆரத் தழுவுகின்றாள். பிறகு காமவேட்கைத் தட்ட என்மேல் அவள் படுக்க நான் அவலை ஆழப்புணர்ந்து மகிழ்ந்து சுக்கில நீக்கம் செய்வதாக. ஆனால் அச்சுக்கிலம் வெளியிலேயே விழுகின்றது.
பொருள்
=======
முதற் கனவு பலருக்கு இத்தகைய சூழ்நிலையில் வரக்கூடிய சபலத்தை விளக்குவது. அந்த மாது தனக்கு ஏற்பட்ட சபலத்தால் கற்பு நெறி பிறழுகின்றோம் என்றும் பாராது ஓர் உளப்போட்டத்திற்கு ஆளாக அந்த ஆடவனுக்கு அதுவே வேண்டிய மனத்துணிவைத் தந்துவிடுகின்றது. இருவரும் ஒரே அறையில் படுப்பதில்லை. ஆனால் ஒரே flat-இல் ஆளுக்கொரு அறை எடுத்துக்கொண்டு வாழ்கின்றனர். இன்னொரு வகையில் இது ஒருதலைக் காமம் என்றும் சொல்லலாம். அவனுக்கு இஷ்டம் ஆனால் அவளுக்கு இல்லை. மனதில் எத்தனியோ தயக்கங்கள். அதனால் மனம் இசையாதுபோக புணர்ச்சி நடக்காது போகின்றது. வெளியே வரும் சப்தம் பெரும்பாலும் உட்குரலாகும்- conscience. தக்க நேரத்தில்ல் அது வந்து உதவ ஓர் பெரிய தவற்றிலிருந்து அவள் காப்பாற்றப்படுகின்றாள்
ந்தப் பொருளைச் சொன்னதும் இது நடக்கக் கூடியதுதான் அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் புகுந்துவிட்டார் ஆனால் அந்த அளவிற்கு இன்னும் போகவில்லை என்று கூறி உடன் வேறோர் பிளாட்டிற்கு குடிபெயர்ந்து விட்டார் அந்த மாது. அங்கு எல்லாம் பெண்களே. மற்றும் வார றுதிகளில் தவறாது தன் கணவனோடும் குழந்தைகளோடும் இருக்க வீடு சென்றுவிடுவார். பிரிந்திருக்கும்போது செவினைப் பாரது போன் செய்து பேசும் பழக்கத்தை கொண்டுவந்துவிட்டார்.
ரண்டாம் கனவு காதல் வெற்றிக் கனவாகும். இது உள்ளபடியே உள்ளத்துப் புணர்ச்சியாகும். இந்த இளைஞன் நல்லவோர் இந்து என்பதோடு பெண்களோடு அதிகமாக வைத்துக்கொள்ளாதவன். நல்ல படிப்பாளி. அவனுக்குக் கவலையைத் தந்தது திருமணத்திற்கு முன்பு இப்படி நடக்கின்றதே என்பதுதான். அந்த மங்கையும் வளாகத்தில்தான் இருக்கின்றாள். ஆனால் கனவின் பொருள் அவள் உன்னை உளமார காதலிக்கத் தொடங்கிவிட்டாள், உன்னையே கணவனாக வரித்துவிட்டால், உனக்கே ஆளாகிவிட்டால் ஆக எப்படியும் உங்கள் திருமணம் நடந்துவிடும் என்று கூற அவன் மனநிம்மதியோடு சென்றான். ஆயினும் போர்வைக்குள் எல்லாம் நடப்பது அதனை மூடி மறைப்பதற்கு ஒப்பாகும். ஆனால் போகப்போக வெளிப்படையாக பெற்றோர்களிடம் சொல்லும் துணிவு வந்துவிடும் என்றும் கூறினேன்.
ஆடைகளைக் கலளந்து அம்மணமாவது அகத்தடைகளை நீக்கி அவளை இவனுக்கே ஆளாக்கிப் படைப்பது. இவனையும் அவ்வாறே செய்வது இவனும் அவளுக்கே என்றாகவேண்டும் என்பது. புணர்வது என்பது இவனும் அதற்கு உடன்படுவது. சுக்கிலம் வெளியே விழுவது இது உண்மையான காமப்புணர்ச்சி அல்ல உள்ளத்துப் புணர்ச்சிதான் என்பதை சூசகமாக தெரிப்பதாகலாம்.
8. வீரியக் காளை
=============
அன்பர்களே,
நான் இன்னும் கனவின்வழி கற்றுக்கொள்கிறவன்தான். அதனால், வருகின்ற கனவுகளை நலமே ஓம்பி எழுதிவைத்து ஆய்ந்து தெளிவது எனது பழக்கமாகி விட்டது. இவ்வகையில் எனக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்த ஓர் ஞானக்கனவினைப் பற்றி இன்று சிறிது சொல்லலாம் என்றிருக்கின்றேன். பொதுவாக இப்படிப்பட்ட கனவுகளை யாரிடமும் சொல்லாது மறைத்து வைக்க வேண்டும் என்பார்கள். ஆயினும் எனக்கு அப்படிப்பட்ட எண்ணம் எல்லாம் இல்லை.
து சென்ற மார்ச்சு மாதம் 18-ந் தேதி வந்தது. இதுபோன்று ஏற்கனவே பற்பல கனவுகள்.
க்கனவே ஏன் வெள்ளை விடலேறு சிவபெருமானது வாகனமாக இருக்கின்றது என்பதை விளக்கியதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் சமய வாழ்க்கைக்கும் உள்ளத் தொடர்பை எனக்கு நலமே தெளிவுறுத்தியது.
கனவு : விடலேறு.
==============
என் குழந்தைகள் அருணனும் நவினாவும் வந்திருக்க , எனது காரினை ஓட்டும் பொறுப்பினை அருணனுக்கேத் தந்து ஊக்குவதாக. அடிக்கடி வந்துபோய்கொண்டிருக்கும் அவனுக்கு களைப்பு இருப்பதாகத் தெரிந்தாலும் நான் விடுவதாக இல்லை. அவனும் காரைச் செலுத்த இணங்கி செலுத்தவும் தொடங்க நான் பின்சீட்டில் அமர்ந்துகொள்கிறேன்.
திடுமென அந்தக் கார் ஓர் வெள்ளை விடலேறுவாகி கட்டுக்கடங்காது செல்லத் தொடங்குகிறது. அருணனால் அதனை வழிக்குக் கொண்டுவர முடியாது போக, நானே இறங்கி வந்து அதனோடு கடுமையாகப் போரிட்டு கட்டுக்குக் கொண்டு வந்து பிறகு இருவரையும் அதன்மேல் ஏற்றி அமர்த்தை பயணத்தைத் தொடர்வதாக
பொருள்:
=======
ங்குக் கார் என்பது எனது உடல். மகனும் மகளும் நாதமும் விந்துவுமாக வரும் குண்டலினி சத்திகள். இதனை வலது பக்க இடது பக்க மூளையின் தொழிற்பாடுகள் எனினும் அமையும். திருமுருகன் விநாயகன் போன்ற ஆண் தெய்வங்கள் என்றும் கலைவாணி காமாட்சி போன்ற பெண்தெய்வங்கள் எனினும் அமையும். இவர்கள்தாம் மந்திர மகளிர் போன்றவை.
ந்தக் கார் வெள்ளைவிடலேறுவாகுவது மலங்கட் கெட உடல் தூய்மை யாகுவதும் அதனால் அளப்பரிய குண்டலினி ஈட்டத்திற்கு ஆளாகுவதும் ஆகும். அதனை இந்த அருணனால் கட்டுப்படுத்த முடியாது போகின்றது. இதன் பொருள் என்ன?
து அபரதெய்வங்களினால் வழிக்குக் க்குக் கொண்டுவர முடியாத அளவிற்கு குண்டலினி பாய்வு நிகழ்வதாகும். இதனால் எனது ஆன்மா சிவதோடு ஒன்றாகி அவனது அருளாலேயே அதனைக் கட்டுபாட்டிற்குள் கொண்டுவருகின்றது. கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவது என்பது ஓய்வு ஒடிவின்றி சிவஞானச் சிந்தையில் விழுந்து ஆழ ஆழ சிந்தித்து அளப்பெரும் சத்தியை ஞானசத்தியாக மாற்றுவதாகும்.
ங்கு இன்னொன்றையும் நான் சொல்லவேண்டும் . எனக்கு வயது 60 ஆகிவிட்ட போதும் இன்னும் இளமை வேகம் தான். இந்தக் கனவு வந்த காலத்தில் உடலிலும் இன்னும் பல நல்ல மாற்றங்கள். தசைநார்கள் சுண்டி இழுத்துக்கட்டப்பட்டன. பற்களும் நரம்புகளும் இவ்வாறே. காலை எழுந்து மாலை வரை ஆழமான கட்டுரைகள் எழுதினாலும் நல்ல உறக்கம் வரும் அளவிற்கு அயர்வு வராதுபோக, நன்றாக காலார பக்கத்தில் இருக்கும் வளாகத் திடலை சுற்றி சுற்றி நடந்து களைப்பாகினால் நல்ல உறக்கம். மனதில் எந்தக் கவலையும் இல்லை. தலைமுடியும் தொடர்ந்து நரைக்காது மெதுவாக கருமைத் தட்டி வருகின்றது.
எனக்கே பெரிதும் வியப்பாக இருக்கும் இவ்விசயங்களை பெரும்பாலார் நம்ப மாட்டார்கள். இருந்தாலும் உண்மை உண்மைதானே?
கனவு 9: சிவதரிசனம்
===============
அன்பர்களே,
நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம், பெரிய புராணத்தில் நாயன்மார்கள் வாழ்க்கையில் நடந்தவெல்லாம் அந்தக் காலத்தோடு முடிந்துவிட்டது என்று. என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. கனவுகள் வழியாக உலகில் நடப்பதைக் காணும் அதுபோன்றவை இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்ற எண்ணத்தைத் தருகின்றது. அவ்வகையில் திருநீலகண்டக் குயவனார் வாழ்க்கையில் நடந்ததுப்போன்றவோர் நிகழ்ச்சி.
ந்தக் கனவிற்குரியவர் இந்து சங்கத்தில் தீவிர ஈடுபாட்டோடு பல நல்ல சிவப்பணிகளை செய்து வந்தவர். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையும் ஆனவர். இவ்வாறு சமுதாய வாழ்க்கையில் வாழ்க்கையில் இருகும்போது மிகவும் கஷ்டப்படும் ஓர் விதைவையை சந்திக்க தொடர்பு வந்து சேர அந்தமாதொடு உறவும் வைத்துக்கொண்டார். இதனை அறியவந்த மனைவி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் இல்லம் சென்றுவிட்டார். இவ்வாறு நடக்கும் என்று நினைத்துப் பார்க்காத இவர் மனம் நொந்து பன்முறை சென்றழைத்தும் மனைவியின் சினம் தணியாது போக, தனி வாழ்க்கை நடத்டினார். அத்தோடு இன்னும் தீவிரமாக கோயில் காரியங்களில் ஈடுபட்டார். ஓர் தொழிற்சாலையில் நல்ல பதவியில் இருந்ததால் பணப்பிரச்சினை என்று ஒன்றுமில்லை. தவறாது குழந்தைகளின் படிப்புக்கு வேண்டியதை செய்தும் வந்தார்.
வ்வாறு வாழ்ந்துவர, ஓர்நாள் அவருக்கு இந்தக் கனவு வந்தது.
கனவு 9: சிவதரிசனம்
================
நான் திடுமென தமிழ் நாட்டில் ஓர் சைவ ஆதீனம் செல்வது போன்று. அங்கு ஓர் மாட்டுத்தொழுவம் போன்ற அறையில் ஆதீனக் கர்த்தர் இன்னொருவரோடு உரையாடிக்கொண்டிருக்க நான் இடைமறித்து யாதோ கேட்பது போன்று. மாட்டுத் தொழுவத்தில் காளைமாடு இருப்பது போன்றும். பிறகு அந்த ஆதீனக் கர்த்தர் எழுந்து என்னை சமையலறைக்குக்ச் கொண்டு சென்று ஓர் பாபெரும் அடுப்பினைக் காண்பிப்பதாக. அங்குதான் தான் எல்லா உணவுகளையும் சமைக்கின்றேன் என்று சொல்வதாக. ஓர் மூலையில் யாரோ ஒருவர் மாவினைப் புடைத்துக் கொண்டிருப்பதாக.
பிறகு இன்னொரு அறைக்குச் செல்கின்றோம். அங்கு அந்த ஆதினக் கர்த்தரின் மகனைப் போன்று ஓர் பதினாறு வயது மதிக்கத் தக்க இளைஞன் அவரோடு. மூவரும் ஓர் சதுர மேசையில் அமர்ந்து பல வகையான ஞான விசயங்களைப் பற்றிப் பேசுவதாக. அதுபொழுது அவர்கள் செய்த ப்லவகையான இனிப்பு ப்லகாரங்கள் தென்படுகின்றன. அந்த ஆதீனத்திற்கு வரும் அடியார்களுக்கு இவை தரப்படும் என்று கூறி எனக்கும் மலாய் மக்கள் கோய் போன்ற இனிப்பு ஒன்றினை வழங்க நான் பெற்று உண்பதாக.
அதுபொழுது என் மனைவியைப் பற்றி பேச்சு எழ, அவள் கோபந் தணிந்துவிட்டது, விரைவில் வீடு திரும்புவாள் என்று அந்த ஆதீனம் கூறுவதாக.
பொருள்
======
எனக்கு பெரும் குழப்பத்தை விளைவித்த கனவுகளில் இதுவும் ஒன்று. பல நாட்கள் சிந்தித்தும் தெளிவான முறையில் பொருள் விளங்கவில்லை. முடிவில் இதனை திருநீலகண்ட நாயனார் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தான் பொருள் விளங்கிற்று.
து ஆருடக் கனவு என்றபோதிலும் தமிழகம் சென்று அங்கு ஓர் ஆதினத்தைக் காண்பதாக இருக்க முடியாது. ஆதீனக் கர்த்தர்கள் மாட்டு தொழுவத்தில் இருக்கமாட்டார்கள், இனிப்புக்களை சமைக்கவும் மாட்டார்கள் வந்து சேரும் அடியார்களுக்கு மனமார வழங்குவதும் பழக்கத்தில் இல்லை.
தனால் இதுவோர் சின்னமக் கனவு (symbolic) என்று தெளிந்திட பிறகு பொருளும் விளங்கிற்று.
வர் தன் அகயாத்திரையில் சிவதரிசனம் பெற்றுள்ளார் என்பதொடு அவன் அருளாலாலேயே மீண்டும் தன்னுடைய மனைவியோடு வாழும் பரிசையும் பெறுகின்றார். காளை மாட்டோடு தோன்றும் ஆதீனம் விடலை வெள்ளேற்றின் சிவபெருமான் ஆகும். உடன் இருப்பது நந்தியாக இருக்கலாம். சோர்ந்துபோன ஆன்மாக்களுக்கு வீரியம் அருளும் வடிவம் அது.
சமையற் கட்டு என்பது தீக்கைத் தலம். ஆன்மாக்களை அடுப்பில் போட்டு வேக வைத்து சமைப்பது, பக்குவப் படுத்துவது.
அவர் செய்த தவறுக்காக குடும்ப வாழ்க்கை சிதைக்கபடுவது தீக்கையின் நிமித்தமாக என்று குறிக்கபடுகின்றது இங்கு. தவறு செய்வார் தப்பிக்க முடியாது. அந்த தவற்று மனத்தைப் போக்கும் வாழ்க்கையில் வேதனையான பல நடக்கும்.
ஆனால் இப்பொழுது இவருக்கு தீக்கை முடிந்துவிட்டது. ஆதீனம் சிவபெருமானாக பக்கத்தில் அவர்தம் குமரனாக இருப்பது பாலகுமரன் தான். உரையாடல் என்பது சிவஞானபோதகம் ஆகும். அதனால் வரும் இன்பமே இனிப்பு பலகாரம் உண்பதாகும்.
ந்த உபதேசத்தின் முடிவில் இன்னொரு நற்செய்தி. அவர் மனைவிக்கும் இந்தப் பிரிவின் வழி தீக்கைகள் நடைபெற அவளும் தணிந்து இப்பொழுது அவரோடு வாழ மீண்டும் வந்துகொண்டிருக்கின்றாள் என்ற நற்செய்தி.
நான் இப்படி இந்தக் கனவின் பொருளைச் சொல்ல அவர் வியந்துபோனார். ஆனால் மகிழ்ச்சிதான். இந்த கனவு வந்தது தொட்ங்கி அவர் மனைவியும் படிப்படியாக மனம் மாறி மூன்று மாதங்களுக்குப் பிறகு பழையபடி இவரோடு வாழத்தொடங்கிவிட்டார். பெற்றொர்களை நம்பிச் சென்றவள் தன் சகோதரிகளும் இன்னும் பல ஆடவர்களும் தன்னை இவ்வளவு கொடுமைப் படுத்துவார்கள் என்று நினைக்கவில்லையாம். இவள் நம்பிய பல உறவினர்களே இவளைக் கட்டிழுக்கு அழைத்தார்களாம். இதனை வெறுத்து கணவனோடு வாழ்ந்து குழந்தைகளுக்கு நல்ல தாயாராக இருந்தால் போதும் என்ற நினைப்பில் திரும்பி வந்துவிட்டாராம்.
கனவு 10: மஞ்சள் மகிமை.
நான் அந்தப் பெண்ணோடும் என் நண்பர் ஒருவருடனும் மிகவும் சுவையாக எதைப்பற்றியோ
உரையாடிக்கொண்டிருக்கின்றோம். அதுபொழுது அந்தப் பெண்னை சிற்றுண்டிக்கு அழைக்க அவளும் உடன்வர
உடன்படுகின்றாள். ஆடையை மாற்றிக்கொண்டு வருகின்றேன் என்று சொல்லி தன் ஆசிரமத்திற்கு செல்கின்றாள். நான்
தொடர்ந்து என் நண்பனோடு உரையாடிக் கொண்டே இருக்கின்றேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் சாளரத்தின்
வழியாக எனக்குக் காத்துக்கொண்டிருப்பது தெரிய வர நண்பனிடம் விடைப்பெற்றுகொண்டு அவளை நோக்கிச்
செல்கின்றேன்.
அவள் இறங்கிவரும்போது தூய மஞ்சள் சேலை அணிந்திருப்பதைக் கண்டு திகைக்கிறேன். பிறகு யாரோ காரைச்
செலுதத அவள் என் பக்கத்தில் பின் சீட்டில் அமருகின்றாள். அதுபொழுது அவல் சேலையின் நிறம் சிறிது மாறி சந்தன
வண்ணம் ஆகுவதாக.
பொருள்
======
மஞ்சள் வண்ணம் பிரமச்சரியத்தை, காமவேட்கை எழாவகை உள்ளம் கட்டிப்போடப்பட்டுளதைக் காட்டும். அது சந்தன
வண்ணமாக மாறும்போதும் பிரமச்சரியத்தின் கடுமை சிறிது குறைந்த நிலை ஆயினும் உள்ளதில்தில் சந்நியாச
நிலைதான். அந்தப் பண் திருமணத்திற்கு இசைந்துள்ளபோதிலும் அதற்கு முன்பு காதல் விளையாட்டுகளில் விழக்கூடிய
முறையில் உள்ளம் இல்லைளாஅயினும் காரில் உடனவ்ருவது அவள் வாழ்க்கை அந்த இளஞனோடு என்று அவள்
முடிவுசெய்துவிட்டதைக் காட்டும். காரை செலஉத்டுவதி இறைசத்திகலே என, இந்த திருமணம் நடந்தே யா கும்
என்றேன். இவ்வாறு நான் கூற அந்த இளஞனுக்குக் கவலை வந்துவிட்டது. இதுவே அவள் இயல்பென்றால் எப்படி
குடும்பம் நடத்துவது, எதற்கு திருமணத்திற்கு இசைந்தாள்என்றெல்லாம் பல கேள்விகள்.
ந்தக் கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் என் அனுபவங்கள் உதவின. இப்படிப்பட்ட தற்காலிக சந்நியாசம்
றையருளின் ஓர் உதவி என்றேன். காமவேட்கை மிக வலிதான தொன்று. அதன் வேட்கைக்குப் பட்டார் நிதானம்
ழப்பது சர்வ சாதாரணம். நினைவெல்லாம் காதல் இன்பத்திலேயே இருந்துவிட்டால் அதன் முதற்பலி படிப்புத்தான்.
ஆக
இறைவனே தற்காலிகமாக அவளது காமயந்திரத்தைக் கட்டிப்போட்டுவிட்டான். பழகுவாள் ஆனால் உன் நினைவாகவே
ருக்கமாட்டாள். ஆனால் படிப்பு முடியும் தருவாயில் இந்தக் கட்டு நீக்கப் படும், காமயந்திரமும் கருதரிக்கும் யந்திரமும்
பிரதிட்டை யாகும். அதுபொழுதே நீ வேண்டுவது எல்லாம் இனிதே நடக்கும் என அவன் சிறிது அமைதியடைந்தான்.
மேற்கொண்டு:
============
தருத்தேர்வில் இதே அகக்கட்டு சதுர வடிவ யந்திரமாய விளங்கும். கனிகள் சதுரமாக இருந்தால் சிந்தனையில் கட்டு.
தருவே சதுர வடிவ யந்திரமாக இருந்தால், காமமே முற்றாக கட்டப்பட்டிருகின்றது என்று பொருள் படும். இந்த சதுரங்கள்
வேர் பகுதியில் இருந்தால் சந்நியாசம் தான் வாழ்க்கையாகிவிடும். இத்தகையாருக்கு துறவு இயல்பாகிவிடும்.
சிவலிங்கத்திற்கு செய்யப்படும் அபிடேகங்களில் சந்தன அபிடேகமும் ஒன்று. அதன் பொருளும் இதுவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.