சனி, 29 ஜனவரி, 2011

உளறல் - 6


மனிதர்கள் மீது வெறுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க விரும்புகிறேன்...
அவர்கள் அவர்களின் இயல்புக்கேற்பவே செயல்படுகின்றனர்...
அவற்றை மறுப்பதற்கோ வெறுப்பதற்கோ நான் யார்?
எனக்கு ஒத்துப் போக முடியவில்லை என்றால் நான் விலகிக் கொள்வதுதான் அறம் சார்ந்த ஒன்று...
மாறாக அவர்களை வெறுப்பது முறையன்று!
சில ஆழமான உறவுகள் நம்மை  வியக்க வைக்கின்றன...
அந்த உறவுகள்தாம் நம் துறவு வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கின்றன.
இறைவனின் விருப்பம் அதுவாக இருப்பின் அது நன்றே நடக்கும்...
உண்மையை உணர இன்னும் சில காலமே இருக்கிறது என்பதை என்னால் நன்கு உணர முடிகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...