சனி, 29 ஜனவரி, 2011

உளறல் - 4


மானுட வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் நிரந்தரமான ஒன்றல்ல என்பது தெரிந்தாலும் மானுட வாழ்க்கையை நாம் அதிகமே நேசிக்கின்றோம்..
மகிழ்ச்சியை நோக்கியே நாமும் செல்ல விரும்புகின்றோம்...
உலகம் நமக்கு உண்மையை உணர்த்தும் போதுதான் அனைத்துமே புரிகிறது... 

நம்முடன் இருப்பவர்கள் உண்மையாக இருக்கவில்லையெனின் நமக்குத் தெளிவு ஏற்பட்டு, வாழ்க்கையில் ஒரு விலகல் ஏற்படுகிறது...
இஃதும் இறைவனின் விருப்பமே...

இது போன்ற நேரங்களில் நாம் மற்றவர்களைக் குறை கூறுவதைவிடுத்து வாழ்க்கை உணர்த்தும் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று  வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

என்பதை ஆண்டவன் நமக்கு உணர்த்தினாலும்...
அவனே எனக்கு ஒரு நிரந்தரமான விலகலைத் தரவேண்டுமென்று வேண்டுகின்றேன்...

இப்பொழுதுதான் உண்மை எனக்கும் புரிகிறது...
நமது வினைக்கு (செயலுக்கு) ஏற்பவே அனைத்தும் நடக்கின்றன...
நமது வினைக்கும் அவனே மூலம் என்றும் உணர முடிகிறது...

எனக்கு இன்னும் சில பற்றுகள் உள்ளன என்பது எனக்கும் தெரியும்...

அதுவும் விரைவில் என்னை விட்டு அகன்றுவிடும் என்று ஓரளவு உணர முடிகிறது...

ஆனால் ஒரேயொரு உறவு மட்டும் என்னோடு கலந்திருக்குமா அல்லது அது நானாகி இருக்குமா என்று புரியவில்லை...
எது எப்படியோ...
எல்லாமே ஆண்டவனின் விருப்பத்திற்கு எற்பவே நடைபெறும் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...