அன்பே சிவம்...
இந்த அன்பு எப்படிப்பட்டது என்பதுதான் புரியாத புதிர்...
தன்னலம் கலந்த அன்பு எவ்வாறு சிவமாகக் கருதப்படும்...
இந்த உலகில், நமது வாழ்க்கையில் ஏற்படும் மனித உறவுகள் அனைத்தும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துதான் என்பதை அறிய நாம் மறந்து விடுகின்றோம்...
அவர்களுக்காகவே நாம் வாழும் பொழுதுதான் ஓரளவு பக்குவம் பெறுகின்றோம்; உயர்ந்த சிந்தனையைப் பெறுகின்றோம்.
ஆயினும் இஃது ஓரளவு முதிர்ச்சி பெற்ற நிலைதான்...
இந்த அன்பில் அவ்வப்போது சிவம் தோன்றி மறையும்... நிலையாக இருக்காது.
விருப்பு வெறுப்பற்று நாம் அனைவரின் மீதும் செலுத்தும் உண்மை அன்புதான் நம்மை மேலும் உயர்த்தும்... இங்கு அன்பு சிவமாக வீற்றிருக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.