சனி, 29 ஜனவரி, 2011

உளறல் - 1


மனிதர்களிடமிருந்து விலகி வாழ விரும்பும் எண்ணம் மேலோங்குகிறது...

நமது சிந்தனைகளுடன் ஒத்துப் போகாத மனிதர்களுடன் நெருங்கிப் பழக முடியவில்லை...

அவர்களை வெறுக்கக்கூடாது என்றுதான் நினைக்கின்றேன்...

ஆனால்,
அவர்களிடம் வைத்த அன்பு மிகுதியின் காரணமாக சினம் மேலோங்கி என் மனித இயல்பு சில வேளைகளில் மாறிவிடுகின்றது... 

அது வெறுப்பன்று என்பது எனக்குத் தெரிந்தாலும் மற்றவர்களிடம் சினம் கொள்ள எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் உணர்கின்றேன்...

நம்முடைய உரிமைப்பொருள் என்ற எண்ணம் எழும்போது அங்கே இருக்கும் அன்பும் மெய்யன்பாக இல்லாமல் தன்னல அன்பாக மாறிவிடுகிறது...

இங்கே ஏற்படும் விலகலில்தான் துறவு தொடங்குகிறதோ..

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...