இன்று ஓரளவு தெளிந்த நிலையில் இருக்கின்றேன்...
என்றாவது ஒரு நாள் என்னுடன் மிக ஆழ்ந்த உறவைக் கொண்டிருந்த ஒருவருடைய பிரிவு இயல்பாக நடக்கும் என்று நான் முன்பு கூறியிருந்தது 95% நடந்துவிட்டது என்றே நினைக்கின்றேன்...
வாய்மையே வெல்லும் என்பது மெய்ப்பிக்கப்படும் நேரம் வந்துவிட்டது...
இதுவும் இறைவனின் முடிவே...
ஒரு காலத்தில் புனிதமாகக் கருதப்பட்ட உறவு இன்று ஒன்றுமில்லாத உறவாகத் தெரிகிறது...
அதற்காக அவர்களை நம்பிக்கைத் துரோகிகள் என்று கூறுவது நமது அறியாமையும் இயலாமையுமேயாகும்...
அவர்கள் மாறவில்லை...
நமது போக்கு அவர்களை மாற்றிவிட்டது... அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்?
அன்று எஃது எனக்கு உண்மையாக இருந்ததோ இன்று அதுவே நமக்குப் பொய்யாகிறது... அவர்களுக்கு அது பொய்யாகி இன்றைய நிலை மெய்யாகிறது...
ஆகவே எது சரி, எது தவறு என்று முடிவு செய்ய நம்மால் இயலாது...
எனவே மற்றவர்கள் மீது குறை கூறுவதை விடுத்து அவர்கள் நமக்கு செய்த நன்மைகளை மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது...
எனவே,
அவர்கள் நலமே வாழ உளமாற இறைவனை வேண்டுகின்றேன்...
இறுதியாக இறைவனிடம் எனக்காக ஒரு விண்ணப்பம்...
இந்த உலகில் நான் வாழ இருக்கின்ற மீத நாள்களிலாவது என்னுடன் உயர்ந்த, புனிதமான உறவுகளைக் கொண்டிருந்தவர்களை (என் எண்ணப்படி) மகிழ்ச்சியாக வாழவிடு...
என்னால் அவர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை எனின் அவர்களை இயல்பாகவே மாற்றிவிடு... விலகல் தானே ஏற்பட அருள்வாயாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.