சனி, 29 ஜனவரி, 2011

கனாவியல் 2



11.  வைகுந்த வாழ்க்கையும் மரணமும்.

அன்பர்களே,

ஞானவுலகினைக் கண்டறிய வாழ்க்கையில் நடப்பவற்றின் சூக்குமங்களைக் கண்டறிய கனவுகள் பெரிதும் உதவுகின்றன. கனவுகளில் பல வகைகள் இருக்கின்றன. ஆழ்வுள்ளத்தெளிவிற்கு பெரிதும் உதவுவனவாகவும் இவை விளங்குகின்றன. கனவுகளில் மிக முக்கியமானவை எதிர்காலத்தை இன்றே உணர்த்துவதாகவும். எதிர்காலத்தை அறியத்தரும் பண்பு கனவுகட்கே உரித்தவொன்றாகும். இங்கு இக்கருத்து Freud  C.G. Jung  போன்றாருக்கு உடன்பாடில்லை என்பது கருதத்தக்கது. ஆயினும் நான் ஆய்ந்த பல கனவுகள் எதிர்காலத்தை இன்றே விளக்குவனவாக இருக்க என்னால் Freud  போன்றாருடன் ஒத்துப் போக முடியவில்லை.

திலும் பலவகை-- எட்டும்  எதிர்காலத்தைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன. சில சில நாட்கள், சில  சில மாதங்கள், சில சில வருடங்கள் என்றவாறு. அதில் இங்கு வரும் கனவு சற்று வித்தியாசமானது-- ஓர் இளைஞரின் வாழ்வின் எல்லையை இன்றே சொல்வது.

தொடக்கதில் இந்தக் கனவின் கடைசிப்பகுதியின் பொருள் தெற்றன விளங்கவில்லை. பலநாட்கள் தொடர்ந்த சிந்தனைக்குப் பிறகே விளங்கிற்று.

ந்தக் கனவைக் கண்டவர் ஓர் 35 வயது இளைஞர், நெடுங்காலம் திருமணம் வேண்டாமென்றிருந்தவர். குடும்பப் பொறுப்புக்கள் வேலை பழு போன்றவற்றின் காரணமாக திருமணம் தள்ளிப்போடப்பட்டது. ஓர் தொழிற்சாலையில்  நல்ல உயர்ந்த  பணியில் இருப்பவர். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் தொழிற்கு பயிற்சி பெற்றுவரும் ஓர் பெண்ணே மணமகள். நேரடியாகவும் பழக்கமுண்டு.  ஆனால் வயது 22 தான். இதனால் வயதுபொருத்தம் சரியில்லையே என்று பலர் கூற இவருக்கு வருத்தம். நல்ல பக்தர், தவறாது கோயிலிற்குச் சென்று அமைதியான வாழ்க்கை வாழ்பவர். இந்தக் கனவின் வழியாக உண்மையைக் கூறி இறைவனே  இவரது கவலையைப் போக்கி இருக்கின்றான்.

 நெடுங்க கனவு என்பதின், பொருளை இடை இடையே கூறுகின்றேன்.

கனவு 11: வைகுந்த வாழ்கையும்  மரணமும்

அ] ஓர் மாபெரும் அங்காடிக் கடையில் கிருஷ்ணன் என்பாரோடு இருக்கின்றேன். எத்தனையோ பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன .  அந்த பெரியவர் என் தந்தையர் போன்று ( ஆனால் என் தந்தையின் பெயர் வேறு) கீழே ஒருவர் ஓரத்தில் புத்தகக்டை திறக்கப் பார்க்கின்றார். என் தந்தை உடன் பட்டாலும் எனக்கு அவரை நம்பமுடியவில்ல. அதனால் வேண்டாம் என்கின்றேன். இன்னொரு பக்கத்தில் பேருந்து நிலையம்.  பல ஊர்களுக்கு செல்லும் வகையில் பேருந்துகள் வந்து கொண்டே இருக்கின்றன. திடுமென அந்த கிரிஷ்ணன் என்பார் என் தந்தை எனப்பட, நான்  மகிழ்ச்சிப் பெருக்கில் -- இந்த மாபெரும் அங்காடிக் கடையின் உரிமையாளர் நான் ஆகின்றேனே என்று நினைத்து!


பொருள்: கனவில் கிருஷ்ணன் என்பாரின் அங்காடிக்கடையாக வருவது உண்மையில் வைகுந்தமான ஓர் இல்லமாகும் அல்லது கற்றளியாகும். இவருக்கு நாரணன் அருள் கிட்ட உலகயின்பங்களை நலமே தூய்ப்பதற்கு வேண்டிய எல்லாம் நலமே  அமைகின்றது. புத்தக்கடை  வைப்பது பிரம்மாவாக இருக்கலாம். அந்தக் கடை பிடிக்காமல் போவது அற்ப சாத்திர அறிவில் ஈடுபாடு காட்டாது போவதைக் காட்டலாம். பேருந்து நிலையம் வழிதவறி இந்த வைகுந்த பதத்தை இழப்பதற்கு உரிய வழிகளாகும்.

ந்த அங்காடிக்கடை தன் தந்தையுடையது என்று உணர்வது வைகுந்தப்பதம் இறையருளால் தனக்கு அமைவதை இவர் உணர்வதாகும்.

ஆ]

உடன் நான் கீழிறங்கி பின்பக்கம் சென்று அங்கு ஒருவருடன் நடனமாடிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்னை, கமலாவை அழைத்துக்கொண்டு அந்த அங்காடிக் கடையின் மேற்பக்கம் வருகின்றேன்.  அந்தப் பின்பக்கத்தில் கழிவரை இருப்பதுபோன்றும் அவள் அங்கு அவ்வப்போது சென்று மலம் கழிப்பதுபோன்றும். அவளும் நான் தான் அந்தபெருங்கடையின் உரிமையாளரின் மகன் என்றறிய பெரிதும் மகிழ்ந்து  என்னோடு  வந்து  மேலே  ஏறி சுற்றித் திரிந்து பிறகு ஓர் escalator  வழியாக மிக அவசரமாகக் கீழே  இறங்குவதாக. பிறகு  அவள் என்னோடு நெடுந்தூரம் நடக்கின்றாள். அன்போடு ஒருவரை ஒருவர் முத்தமிட்டுச் சென்றவாறு இணைந்து நடக்கின்றோம்.

பொருள்:

ங்கு பின்பக்கம் என்பது  அவள் கற்று பயிற்சி பெற்றுவரும் இடம். மலம் கழிப்பது என்பது  அவள் அகத்தே இருக்கும் அஞ்ஞானத்தைப் போக்குவது, ஆகவே படிப்பில் நல்ல அக்கறைக் காட்டுவது.  ஒருவருடன் ஆடுவது ஆசியர் ஒருவரோடு நலமே உரையாடி அறிவினை வளர்ப்பதாகலாம். இவன் கிருஷ்ணன் மகன் என்று அறிவதும் அங்காடிக் கடையின் உரிமையாளரின் திருமகன் என்று அறிவதும்,  அவள் நல்ல கணவனாக அமையக் கூடியவன், அவனோடு கூடிய  வாழ்க்கை மிக இன்பமானதாக அமையும் என்று அவள் உணர்வதாகும். அந்த அங்காடிக் கடை புகுந்து அவனோடு திரிவது, அவனோடுப் பழகி இவற்றையெல்லாம் உண்மையென்றே அறிந்து கொள்வது. பிறகு இறங்கி வந்து அவனோடு முத்தமிட்டவாறு நெடுந்தூரம் நடப்பது, அவனை மணம் செய்து இடையே விட்டு விலாகாது அவனுக்கு நல்ல துணையாக வாழ்வதாகும்.

)

ப்பொழுது விந்தையான ஓரிடத்திற்கு வந்து சேர்கின்றோம். அவளோடு நடந்து செல்ல  வலது பக்கதில் பல வகையான பொம்மைகள். ஆனால் அவை உயிர் உள்ளவைபோல் அசைகின்றன. பிறகு அவற்றைக் கடந்து செல்ல, உயிரற்ற மண்பொம்மைகளாக நிற்கின்றன. திடுமென அவளும் அப்படிப்பட்ட ஓர் பொம்மையாக மாறிட அளவிலும் குறைய  அதனைத் தூக்கிக் கொண்டு ஓர் பீடத்தின் அருகே வருகின்றேன். பொம்மையாகிவிட்ட அவளை நான் அந்த பீடத்தில் இட வேண்டும். அவ்வாறே நானும்  இட அது ஓர் குழிக்குள் சென்று  மறைகின்றது. ஆனால் உள்ளிருந்து புகையும் ஒளிக்கதிர்களும் வெளிவர திகைத்து நிற்கின்றேன். பிறகு இன்னும் அதிசயமாக உள்ளிருந்து பிரேதங்களாகப் பல தாமே மேலே உடலைப்  போர்த்தியவாறு வருகின்றன!

பொருள்:

துவே என்னைப் பெரும் திகைப்பில் ஆழ்த்திய பகுதியும் பொருள் விளங்காது மலைத்த பகுதியும் ஆகும். காட்சிகள் வந்து உதவவே பொருளை அறிய முடிந்தது.

ப்பகுதி  அவர்களின் வாழ்வின் இறுதியைக் காட்டும்.  உயிருள்ள பொம்மைகள் எதோவொரு வகையில் முதுமையின் காரணமாக சத்தியெல்லாம் இழந்து செயலற்றுப் போவது.  உயிரற்ற மண்பொம்மையாகுதல், மரணமடைதல். பொம்மையை பீடத்தில் இடுதல்  என்பது அவளை, அவள் உடலை எரித்தல்  அல்லது புதைத்தல் ஆகும்.  புகை வர எரித்தல் போலும். அவள் ஆவி மேலுலகு  செல்வதை அந்த மேலெழும் பிரேதங்கள் காட்டுவதாக இருக்கலாம்.

ஈ) இப்பொழுது இன்னொரு இப்படிப்பட்ட பிரேதம் வெளியேவந்து ஆனால் ஓர் வெள்ளை மாதாக வெடிக்கின்றது. அடுத்தாற்போன்று இன்னொரு இதேப்போன்ற ஓர் வடிவம்  வெடித்து ஆனால் ஓர் வெள்ளை இ¨ளைஞனாக ஓர் வீரனாக உருவெடுத்து நிர்கின்ரது. பிரகு அவன் என்னிடம் பேசுவதாக. தலைவி உன்னைக் காண்பாள் விரைவில் என்பதாகா. பிரகு தலைவி என்பாள்  நெடும் தூக்கத்திலிருந்து விழித்து நான் காத்திருப்பதை அறியவந்து  என்னோடு உரையாடுவதாக. நெடுந்நேரம் உறங்கிவிட்டேன் இல்லையா என்ரு  என்னைக் கேட்பதாக.

பொருள்.

து மரணத்டிற்குப்  பிறகு அந்தப் பெண்ணிற்கு நெடும் உறக்கம் அருளப்படுவதாகும். உறக்கம் தான் வீடுபேறு அல்ல, மீண்டும் விழிப்பது ந்டக்கும் ஆகவே இன்னொரு பிறப்பு உறுவது உணர்த்தப்படுகின்றது.  வெள்ளையர்களாக வருவது தெய்வங்கள். இங்கு நீண்ட உறக்கத்டிலிருந்து எழுந்து காட்சித் தருவது பூமாதேவியாக இருக்கலாம்.


பொது:

ந்தக் கடைசிப் பகுதியே மிக முக்கியமானது.  அந்த ஆடவன் மரிப்பதற்கு முன் இவள் மரித்துவிடுகின்றாள். சுமங்கலியாக மறுவுலகம் போய் சேர்கின்றாள். ஆக கணவன் சற்று வயது கூடியிருப்பதின் காரணத்தால்  இவளை  விதவையாக்கி விட்டுப் போய்விடுவான் என்பதில்லை.

மேலும் கடைசிக் காலம் வரை இவன் உடனிருந்து ஈமக்கிரியைகளை செய்வது இவர்கள் நெடுங்காலம் கணவன் மனைவியாக இணைந்து வாழ்வர் என்றும் மணமுறிவு போன்றவை நிகழா என்றும் காட்டுகின்றது.

பொம்மைக்கொலு என்பது பிணியால் அல்லது விபத்தால் அற்ப ஆயுளில் மரணமடைவது அல்ல. முதுமையுற்று இயல்பாக மரணமடைவது ஆகும். ஆக இவ்விருவரும் நலமே நெடுங்காலம் வாழ்வர் என்றும் உணர்த்துகின்றது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...