நான் பிரியும் என்று நினைத்த உறவு மீண்டும் மலர்ந்தது எனக்கு வியப்பைத் தரவில்லை...
ஆனால்...
இறைவன் என்னை எதற்கு அணியம் செய்கின்றான் என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. எது நடந்தாலும் மற்றவர்களுக்கு இடையூறின்றி நான் அமைதி பெற வேண்டும் என்ற என் எண்ணம் ஈடேறும் என்றே கருதுகின்றேன்.
மற்றவர்களின் உணர்வை மதிப்பது என்றால் என்ன என்பதைப் பலரும் பல விதமாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
எல்லோராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து “ விட்டுக் கொடுப்பது” ஒன்றுதான்...
இஃது ஏற்புடைய ஒன்றா?
ஒரு சிலரின் மகிழ்ச்சிக்காக பலர் துன்பப்பட வேண்டுமா?
தியாகம் என்ற பெயரில் அறம் பிறழலாமா?
இது சரி... இது தவறு என்று தீர்ப்பு கூற நான் யார்?
எனவே அவர்களின் மகிழ்ச்சி எதுவோ... அஃது எங்கே கிடைக்கிறதோ அவர்கள் அதைச் சுயமாகத் தேடிக் கொள்ளட்டும்... தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அறமாகுமா?
நான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களும் விட்டுக் கொடுக்கலாமே?
எனவே அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப நடப்பதுதான் சரி என்று கருதுகின்றேன்... அதற்காக அவர்களின் விருப்பத்திற்கு நாம் தடையாக இருக்கக் கூடாது.
எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும் என்பது நான் உணர்ந்த ஒன்றுதான்...
எனவே இறைவனின் விருப்பத்திற்கு ஏற்பபவே அனைத்து நடக்கும் என்பதை அவர்களும் உணரும் நேரம் வரும்...
அப்பொழுது அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.