சனி, 29 ஜனவரி, 2011

உளறல் - 7


இப்பொழுது அதிகம் தனிமையையே விரும்புகின்றேன்...
என்னுடன் இருக்க விரும்புகின்ற ஒரு சிலரும் என்னை மறைமுகமாகக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்...
நான் செய்வது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை...
ஆனால்,
என்னுடைய அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுமாயின் விலகல் தானே ஏற்பட்டுவிடும் என்பதை அவர்கள் உணர மறுக்கின்றனர்...
நான் அனைவரது உணர்வுகளையும் மதிக்கின்றேன்;உணர்கின்றேன்.
ஆயினும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப நடக்க முடியவில்லை...
எனவே,
என்னுடன் ஒத்துப் போக முடியவில்லை என்றால் விலகல் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது... ஆண்டவனைத் தவிர...
இதில் நான் மேலானவனா அல்லது அவர்கள் மேலானவர்களா என்பது தெரியவில்லை...
எது எப்படி இருந்தாலும் மேலான உண்மைகள் மேலான உண்மைகளாகவே இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அறம் சார்ந்த வாழ்க்கை வாழாதவர்கள் அதற்குரிய பலனைத் திண்ணமாக அடைவர்...
நான் தவறு இழைத்திருந்தால் ஆண்டவன் திண்ணமாக அதற்குரிய தண்டனையை எனக்கு வழங்குவான்...
மற்றவர்கள் மீது தவறு இருப்பின் உண்மையாகவே அவர்களை மன்னிக்கும்படி ஆண்டவனை வேண்டுகின்றேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...