என்னால் இனி யாரையும் நிறைவு படுத்த முடியாது என்பதை உணர முடிகிறது...
மனிதர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை எதிர்பார்க்கின்றனர்...
மகிழ்ச்சியின் தரமும் வேறுபடுகின்றது.
என்னுடைய மகிழ்ச்சி அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை...
அவர்களுடைய மகிழ்ச்சியை என்னால் இப்பொழுது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும்...
என் உறவு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. இருப்பினும் எனக்காக அவர்கள் துன்பப்படுவதை உணர முடிகிறது... அதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.
எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டுமாயின் மனித உறவுகள் பயன் தரா என்றே நினைக்கின்றேன்...
ஒரே பக்குவத்தில் இருப்பின் அஃது இயலும் என எண்ண வாய்ப்பிருக்கிறது.
அனைவரது விருப்பமும் ஒரே மாதிரியாக இருக்க முடியுமா?
திண்ணமாக முடியாது...
என்னால் மற்றவர்களிடம் போலியாகப் பழக முடியவில்லை...
என் இயல்பையும் என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை...
மற்றவர்களை நிறைவு படுத்தவும் முடியவில்லை...
எல்லோரும் என்னை விட்டு விலகும் நேரம் வந்து விட்டதோ என் எண்ணத் தோன்றுகிறது...
எனது பார்வை வேறு, அவர்களுடைய பார்வை வேறு...
பார்வை வேறுபடுமாயின் ஒரே பாதையில் எவ்வாறு செல்வது?
என்னுடைய இயல்பு இயற்கையான ஒன்று என்பதை மட்டும் அவர்கள் புரிந்து கொள்வார்களா?
நான் எதையும் வேண்டுமென்றே செய்யவில்லை...
அனைத்தும் தானாகவே நடக்கிறது...
அனைத்தும் இறை செயல் என்றே நான் கருதுகின்றேன்...
நான் மாற வேண்டும் என அவர்கள் நினைத்தால்...
இறைவனின் விருப்பமும் அதுவாகவே இருந்தால்...
எனக்கும் அதில் உடன்பாடுதான்...
ஆனால் அஃது இயற்கையாக நடைபெறவேண்டும் என்று விரும்புகின்றேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.