இறைவனின் மீது பழியினைப் போட்டுவிட்டு நான் தப்பித்துக் கொள்ள முயல்வதாகவும் மற்றவர்கள் கருதலாம்...
நான் மற்றவர்களின் கருதுக்களுக்காக வாழ்ந்த காலம் கடந்து விட்டது...
மற்றவர்களின் சிறு துன்பம் கூட என்னை மிகவும் வருத்துகிறது...
எனவே, என்னால் மற்றவர்களுக்குத் துன்பம் நேருகிறது என்றால் என் விலகலை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்...
என் இயல்பைப் புரிந்து கொண்டு அவர்கள் எனக்கு வழிவிட வேண்டும்...
நான் அவர்களை விட்டு விலகி, ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கிச் செல்லவில்லை...
அமைதியான, மற்றவர்களுக்குத் துன்பம் தராத துறவு வாழ்க்கையை நோக்கியே செல்கிறேன் என்பதுதான் உண்மை...
ஒவ்வொரு முறையும் ஒன்றைத் துறக்க முற்படுகின்றேன் என்பதும் உண்மை...
என் வழியில் என்னுடன் வர விரும்புகின்றவர்கள் இதை உணர்ந்து கொள்வார்களா?
புரிந்து கொள்ள முடியவில்லை எனின் திண்ணமாக நான் தனித்தே செல்ல வேண்டியிருக்கும்....
இஃது என்னுடைய முடிவன்று...
இஃது எச்சரிக்கையுமன்று...
எனது அன்பான வேண்டுகோள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.